(எஸ்.எல். மன்சூர்;)
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இரண்டு முக்கிய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் அல்ஹாஜ் எம். அனஸ்(ஜேபி) தெரிவித்துள்ளார். 01.08.1953 ஆம் ஆண்டில் கொழும்பு கொம்பனித்தெரு அரசினர் முஸ்லீம் பாடசாலையான இன்றைய அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அன்றை அதிபராக இருந்த ஐ.எல்.எம். மசூர் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த அமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னிட்டு உழைத்த முஸ்லீம் தலைவர்களான மர்ஹூம்களான சேர்.றாஸீக் பரீத், ஏ.எம்.ஏ. அஸீஸ், எச்.எம். இஸ்மாயில் போன்றோர்களையும் நினைவுறுத்தும் வகையில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும், கொழும்பு இக்பால் வித்தியாலயத்திலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் தலைவர் எம். அனஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் அறுபது வருடங்களை நினைவுறுத்தும் வகையில் நினைவு மலரொன்றும் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மிக நீண்டகால வரலாற்றைக் கொண்ட இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் நெறிப்படுத்தலின் கீழ் நாட்டிலுள்ள ஆசிரியர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை வெளிக் கொணரவைத்து அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுத்துள்ள இச்சங்கத்தின் வரலாற்றுப் பதிவுகள் என்றும் தடம்பதித்துள்ளன. இதனை நினைவுர்ந்து, அந்த வரலாற்றுக்களை ஆக்கத்திற் கொண்டுவரவும், இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும் தலைவர் எம்.அனஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நினைவு மலரில் சங்கத்தை நெறியாண்ட தலைவர், செயலாளர், பொருளாளர்களின் தகவல்கள், கல்வித்துறையில் நிகழ்த்திய சாதனைகள் போன்ற விபரங்களும் இம்மலரில் இணைக்கப்படவுள்ளதாகவும் இதுபற்றிய தகவல்கள் இருப்பின் தேசிய பொருளாளருக்கு அனுப்பிவைக்குமாறும் அதன் தலைவர் எம்.அனஸ் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment