(எஸ்.எம்.அறூஸ்)
வாஹிட் சேர் என்று எல்லாராலும் மரியாதையாக அழைக்கப்படும் அல்-ஹாஜ் யூ.எல்.வாஹிட்
அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் அன்றைய சாதனா பாடசாலையில் ஆரம்ப கல்வியையும் கல்முனை சாஹிரா கல்லூரியில் இடைநிலை கல்வியையும் கற்றுத் தேறிய பின் பேராதனை பல்கலைக்கழகத்தில் தமது பட்டப் படிப்பை மேற்கொண்டு பட்டதாரியுமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
1972 இல் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்ற வாஹித் மாஸ்டர் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விசேட பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியராக தனது வாண்மையை வளப்படுத்திக் கொண்டார். மாணவர் மைய கற்பித்தல் ஆற்றலோடு நல்லாசிரியனாக அளப்பரிய சேவையாற்றினார். அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று காணப்படும் பதவி நிலை உத்தியோகத்தர்களின் விளைவுக்கு இவரது திட்டமிட்ட கல்விச்சேவையும் வழிகாட்டலும் துணையாயிற்று.
அக்கரைப்பற்று வலய பாடசாலைகளி;ன் கல்வி மே;பாட்டுக்கு இவரது உதவிக் கல்விப் பணிப்பாளர் பதவி நன்கு பயனளித்தது. மேலதிகாரிகளோடு மிகவும் ஒத்துழைத்து மாணவர்களது கல்வி எழுச்சிக்கு பாடுபட்டார். யுனிசெப் இணைப்பாளராகவும் இருந்து பிள்ளைநேயப் பாடசாலைகளை வளர்த்தெடுப்பதில் இவர் காட்டிய ஆர்வம் அளப்பரியது. மாமுலான கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் பாடசாலை நிர்வாக முறைகளை விடுத்து புதிய எண்ணக்கருக்களை அமுல் படுத்தி நல்ல மாற்றங்களை காண்பதில் இவருக்கு ஆர்வம் அதிகம்.
கல்விப் பணியோடு சமூகப் பணியிலும், விளையாட்டுத்துறையிலும் இவருக்கு அதித ஈடுபாடு காணப்பட்டது. இவரிடம் மறைந்து கிடந்த நிர்வாக ஆற்றல் மொழிவளம் சமூகப்பற்று முதலானவற்றை இனங்கண்ட மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஸ்ரப் அவர் வகித்த புனர்வாழ்வு,புனரமைப்பு அமைச்சின் அம்பாரை மாவட்ட உதவி திட்டப் பணிப்பாளராக நியமித்தார்.
அஸ்ரபின் மறைவின் பின்பு அமைச்சர் ரவுப் ஹக்கீம் தான் வகித்த கிழக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் திட்டப் பணிப்பாளர் எனும் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார். அம்பாரை மாவட்ட உட்கட்டமைப்பு செயற்திட்டங்களை முறையாக கையாண்டு பாதிப்புக்குள்ளான பிரதேசங்களின் அபிவிருத்திக்கு முன்னின்று உழைத்து அனைத்து தரப்பினரதும் பாராட்டைப் பெற்றார்.
கொழும்பு கலை,கலாச்சார மன்றம், அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னனிகளின் அம்பாரை மாவட்ட சம்மேளனம், அட்டாளைச்சேனை பிரதேச செயலக சாஹித்திய மன்றம் என்பன இவரது கல்விப் பணி, சமூகப்பணி என்பவற்றை பாராட்டி பரிசளித்து பட்டங்கள் வழங்கி கௌரவித்துள்ளன.
அரச கடமைகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் கல்விச் சேவையிலும் சமூக சேவையிலும் ஈடுபாடு காட்டி மானுட மேம்பாட்டுக்கு உழைக்க வாஹித் மாஸ்டர் மேலும் பல்லாண்டு வாழ வல்ல இறைவன் வழிவகுப்பானாக...
0 comments :
Post a Comment