கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலப் பாடங்களைப் கற்பிப்பதற்காக 800 பட்டதாரிகள் இன்று நியமனம்.


ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்க்காக 1000 இடைநிலைப் பாடசாலைகளில் க.பொ.த உயர் தர வகுப்புக்களில் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலப் பாடங்களைப் கற்பிப்பதற்காக பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதன் பிரகாரம் இப்பாடசாலைகளில் உயர் தர வகுப்புக்களில் கணித மற்றும்  விஞ்ஞானப் பாடங்களைக கற்பிப்பதற்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் பொருட்டு,  கடந்த வருடம் நடைபெற்ற போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைப் என்பவற்றில் பெறப்பட்ட புள்ளிகளின்  அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 800 பட்டதாரிகளுக்கான நியமன் இன்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தவினால் வழங்கப்பட்டது.

இவ்வாசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் இன்று(21) காலை பத்தரமுல்லை ஜனகலா மண்டபத்தில் கல்வி அமைச்சா பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :