எமக்குப் பின்னால் அணிதிரண்டிருக்கும் மக்களையும் பிக்குகள் கூட்டத்தையும் கண்டு சில அரசியல்வாதிகளுக்கு கிலி பிடித்துவிட்டது என பொது பல சேனாவின் தேசிய அமைப்பாளர் டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற அவ் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அரசியல்வாதிகளைப் போன்று அரிசி பேக்குகளையும் சாராய போத்தல்களையும் கொடுத்து ஆட்களைக் கூட்டுவதில்லை. எமது ஆதரவாளர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களல்ல. முஸ்லிம்களைத் தாக்குவதும் எமது நோக்கமல்ல.
எமக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் கூட எமது கிளைகளைத் திறந்து செயற்பட வருமாறு சில பௌத்த இளைஞர் அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
.VV
0 comments :
Post a Comment