தமிழ்நாடு சென்ற இலங்கை புத்த பிக்கு மீது தஞ்சாவூரிலும், திருச்சியிலும் மோசமான தாக்குதல் -வீடியோ இணைப்பு.


தமிழ்நாடு வந்த இலங்கை புத்த பிக்கு மீது தஞ்சாவூரிலும், திருச்சியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் சுற்றுலாவை முடித்துவிட்டு ஆன்மீக குழுவுடன் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த புத்த பிக்குவை கடுமையாக தாக்கினர் தமிழ் உணர்வாளர்கள்.
ரயிலுக்குள் ஏறி உட்காரச் சென்ற பிக்குவை ஆவேசமாக தமிழ் உணர்வாளர்கள் தாக்கினர்.
இந்த தாக்குதலில் நிலைகுலைந்து போன புத்த பிக்கு ரயில் பெட்டிக்குள் ஓடினார். ஓட ஓட விரட்டி அடித்து உதைத்தனர். பின்னர் ரயில் பெட்டியிலிருந்து குதித்து வெளியே ஓடினார். அப்போதும் துரத்தி துரத்தி வந்து அடித்தனர்.
கூட்டத்திற்குள் ஓடிச் சென்ற போது, பொதுமக்கள் தமிழ் உணர்வாளர்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர்.
அப்போது, ‘’சிங்கள நாயே ஓடிப்போ! தமிழனை அங்கே கொன்றுவிட்டு இங்கே எதற்குதா வந்தே. எந்த ஊருக்கு வேண்டுமானாலும் போ! தமிழ்நாட்டுக்கு மட்டும் வராதே! சிங்கள நாயே ஓடிப்போ!’’ என்று ஒரு தமிழ் உணர்வாளர் கத்திக்கொண்டிருந்த போது, இன்னொரு தமிழ் உணர்வாளர் மீண்டும் புத்த பிக்குவை கடுமையாக தாக்கினார்.
பின்னர் உணர்வாளர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதற்குள் தகவலறிந்து பொலிஸாரும் வந்து விட்டனர். அவர்கள், புத்த பிக்குவை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

நன்றி கனடா மிரர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :