மகளீர் தினத்தினை முன்னிட்டு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற செயலமர்வு.-படங்கள் இணைப்பு



சங்கமன்கண்டியில் அமைந்துள்ள சமூக அபிவிருத்தி நிறுவனமானது ஒக்ஸ்பாம் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் நிதி உதவியுடன்
 சங்கமன்கண்டியில்  1997 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமூக அபிவிருத்தி நிறுவனமானது ஒக்ஸ்பாம் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் நிதியுதவியுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்துடன் இணைந்து வறுமை,யுத்தம் அனரத்தங்களின் போது இலகுவில் பாதிக்கப்படும் சமூகத்திற்கு பல்வேறு செயற்பாடுகளைச் செய்துவருவதோடு அந்த வகையில் மகளீர் தினத்தினை கொண்டாடும் முகமாக  திருக்கோவில் பிரதேச செயலகத்தில்  அதாவது
 2013-03-15 ம் திகதி அன்று (வெள்ளிக்கிழமை) திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சேவை வழங்குனர்களை உள்ளடக்கி 'பெண்களுக்கெதிரான வன்முறையினை குறைக்க ஒன்றுபடுவோம் 'என்ற தலைப்பின் கீழ் செயலமர்வு ஒன்று இடம் பெற்றது. இதற்கு திருக்கோவில் பிரதேசசெயலாளர்.

 கோபாலரெத்தினம் மற்றும் கிராமசேவகரான வீரரமணி,மற்றும் தமிழ்வேந்தன் ஆகியோரும்,மற்றும்  சுகாதார உத்தியோகத்தர் ,சமுக சேவை உத்தியோகத்தர், பட்டதாரிப் பயிலுனர்கள், பொலிஸ் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் .உள நலப் பிரிவு உத்தியோகத்தர் , கிராம மட்டத் தலைவர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவன இணைப்பாளர் வினோ,மற்றும் மத்தியகுழு தலைவி சுகந்தினி அத்துடன் நிறுவன உத்தியோகத்தர்களான,;, , குமாரிப்பிரபா, அஜந்தலதா குணசேகரம், கமலேஸ்வரன் விஜயவதி,திலகராணி நிதர்சினி ஆகியோர் கலந்து கொண்டனர் அத்துடன் சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்கு நிதி வழங்கும் நிறுவனமான ஒக்ஸ்பாம் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் பால் நிலை உத்தியோகத்தரான இராஜலெட்சுமி அவர்களும் மற்றும் மட்டக்களப்பு னநளம அமைப்பு உத்தியோகத்தரான தாருகா என்பவர்கள் இச் செயலமர்வுக்கு கலந்து கொண்டனர்.

மற்றும் இச் செயலமர்பானது இரண்டு நிமிட இறைவணக்கத்துடன் ஆரம்பித்து முதலில் வரவேற்பு உரையினை இணைப்பாளர் வினோ அவர்களால் வரவேற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருக்கோவில் பிரதேச செயலாளர் கோhபாலரெத்தினம் தனது தலமை உரையிலே பெண்கள் தினம் ஏன் கொண்டாடப்படுவது என்பதனை தெளிவாக கூறினார். அதனைத் தொடர்ந்து உளவளப் பிரிவ உத்தியோகத்தரான சாந்தன் அவர்கள் வன்முறை தொடர்பாக உரையாற்றினார். அதன் பின்பு ஒக்ஸ்பாம் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் பால் நிலை உத்தியோகத்தரான இராஜலெட்சுமி அவர்கள்  பெண்களுக்கு எதிரான வன்முறையினை எவ்வாறு குறைக்கலாம் என இலகுபடுத்தினார்  அதனைத் தொடரந்து  மட்டக்களப்பு னநளம அமைப்பு உத்தியோகத்தரான தாருகா என்பவர்கள் பயிற்சியினை குழுச்செயற்பாட்டின் மூலம் அதாவது பாலுக்கும் பால்நிலைக்குமான வேறுபாடு,மற்றும் வன்முறைகள் எந்த வகையில் நடைபெறும், பாதிக்கப்பட்வர்களை எவ்வாறு பாதுகாக்கலாம்  எங்க உதவிகளை பெற்றுக்கொடுக்கலாம் என்றும் குழச்செயற்பாடுகள் ,விளையாட்டினுடன் இலகுவாக இலகபடுத்தியதற்கமைவாக இணைப்பாளர் வினோ அவர்களால்  நன்றி கூறப்பட்டு செயலமர்வானது  பிற்பகல் இரண்டு மணியளவில் மதியபோசனத்துடன் இனிதே நிறைவு பெற்றது.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :