அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு கிளினிக் செல்லும் கர்ப்பினித் தாய்மார்கள் வைத்திய அதிகாரியின் பிந்திய வருகையின் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்தே கிளினிக் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், ஆசனங்களின்றி தாங்கள் அதிக நேரம் நிற்கவேண்டியுள்ளதாகவும் இதனால் பாரிய கஷ்டத்தை எதிர்நோக்குவதாவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதான வீதியில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பனிமனைக்கு கிளினிக் செல்லும் கர்ப்பினி தாய்மார்களே இவ்வாறு தெரிவிக்கின்றனர். தாங்கள் ஒவ்வொறு முறையும் கிளினிக் பரிசோதனைக்காகச் சென்று பதிவு இலக்கங்களைப்பெற்று நீண்ட நேரம் காத்திருந்த பின்பே சுகாதார வைத்திய அதிகாரி சுமார் 10.00 மணிக்கு பிறகே வருகை தருவதாகவும் தாங்கள் நீண்ட நேரம் காத்திருந்து அதிக நேரங்களை செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் பெறும் இவ்வாறான அதிகாரிகளின் அசமந்தப்போக்கினால்; மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கிவருகின்றனர். அதிகாரி கடமை நேரங்களை உதாசீனம் செய்வதுடன்; அரசாங்க விதிமுறைகளை மீறுவது மட்டுமள்ளாமல் மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் துரோகமிழைக்கின்றனர்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மற்றும் அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் இப்பிரச்சிணையை கருத்திற்கொண்டு இப்பிரச்சிணைக்கு உடணடி தீர்வினை வழங்க வேண்டுமென அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இப்திகார்
0 comments :
Post a Comment