இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஊன்.
பதுளை ப / அல் -அதானின் முன்னாள் அன்புக்குரிய ஆசிரியர் நசீல் அவர்கள் காலமானார்கள் .

ஆசிரியர் தொழிலுக்கு எடுத்துக்காட்டாகவும் , ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாகவும்
வாழ்ந்து காட்டிய அவர் அவரின் கடைசி நாட்களில் பாகின்சன் நோயினால்
பாதிக்கப்பட்டிருந்தார் .
- நேரத்திற்கு முன் கடமைக்கு சமூகம் தருவார்.
-ஓய்வுநேரம் (off period) எடுக்க மாட்டார்.
-பகுதிநேர வகுப்புகளுக்காக ஒருபோதும் காசு அறவிடமாட்டார்.
-இடைவிலகிய மாணவர்களை வீடுதேடி சென்று மீண்டும் கல்வியை தொடர வழி செய்வார்.(அதில் நானும் ஒருவன் )
-லீவு எடுக்க மாட்டார்.
-ஒரு போதும் உட்கார்ந்து கற்பிக்கமாட்டார்
-எப்போதும் முக மலர்ச்சியுடனும், கம்பீரமாகவும், புன்சிரிப்புடனும் , சுறுசுறுப்பாகவும் காட்சி தருவார் .
இப்படியாகப்பட்ட ஒரு உதாரண ஆசானை கடந்த சில தினங்களுக்கு முன் நானும் எனது நண்பன் நவாசும் (இன்னுமொரு பழைய மாணவன் ) சுகம் விசாரிக்க சென்றோம் . சுமார் இருபது வருடங்களுக்கு முன் என்னை வழிநடத்திய எனது ஆசானின் தள்ளாத நிலை கண்டு நிலை குலைந்து நின்றோம் . அந்த நிலையிலும் என்னை அடையாளம் கண்டு முசம்மில் என்று என்பெயர் கூறி அழைத்தது என்னை மெய் சிலிர்க்க வைத்தது . இன்று 2013/03/26.காலையில் அவர் மரணித்த செய்தி கேட்டவுடன் பதுளை, பசறை பாதால்கும்புரை ,அலுபொத்தை,போன்ற பிரதேசங்களில் இருந்தும் அன்னாரின் பழைய மாணவர்களும் உறவினர்களும் ஊரார் உற்றார் அனிவரும் திரளாக வந்து ஜனசாவில் பங்கு கொண்டனர் .

ஜனாஸா அவரின் மைலகஸ்தென்ன
இல்லத்திலிருந்து பதுளை ஜும்மா பள்ளிவாயில் முஸ்லிம் மைய்யவாடிக்கு எடுத்து
செல்லப்பட்டு லூகர் தொழுகைக்கு பின்பு நல்லடக்கம் செய்யப்பட்டது . ஜன்னத்துல்
பிர்த்தவுஸ்சை அல்லாஹ் அவருக்கு வழங்குவானாக.
0 comments :
Post a Comment