இலங்கையின் பாடசாலைகள் கிரிக்கட் பிரிவில் முதலாம் பிரிவு தரத்தில் விளையாடும் ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலை கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி


(எஸ்.எம்.அறூஸ்)

கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரிக்கும் கொழும்பு ஸாஹிறா கல்லூரிக்குமிடையிலான 19 வயதுக்குட்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் கிரிக்கட்  போட்டியில் ஸாஹிறாக் கல்லூரி 9 ஓட்டங்களினால்  திரில் வெற்றியைப் பெற்றுள்ளது.

பெனாகொட மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸாஹிறாக் கல்லூரி 43.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சிஹான் வீரசிங்க 51 ஓட்டங்களையும், நிக்ஸி அஹமட் 38 ஓட்டங்களையும் நாஸீக் நஸீர் 20 ஓட்டங்களையும் பெற்றனர். கிழக்கின் நாயகன் நிக்ஸி அஹமட் 23 பந்துகளில் இரண்டு சிக்சர்களையும் ஐந்து பவுண்டரிகளையும் அடித்தே 38 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

பந்துவீச்சில் டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி சார்பாக சுபுன் மதுசங்க 27 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களையும், முத்தலிப் முகம்மட் 24 ஒட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

வெற்றி பெறுவதற்கு 175 ஓட்டங்களைப் பெறத் துடுப்பெடுத்தாடிய டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரி அணியினர் 41 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் அக்கில் இன்ஹாம் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஸாஹிறாக் கல்லூரி சார்பாக இர்சாத் உமர் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும், அமித்த கௌசல்ய 36 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

கிரிக்கட்டில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அரவிந்த டீ.சில்வா, ஹஸான் திலகரத்ன, போன்ற வீரர்களை உருவாக்கிய பாடசாலைதான் கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரியாகும்.



இலங்கையின் பாடசாலைகள் கிரிக்கட் பிரிவில் முதலாம் பிரிவு தரத்தில் விளையாடும் ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலை கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த சில வருடங்களாக கிரிக்கட்டில் முன்னணியில் திகழும் ஸாஹிறாக் கல்லூரி பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் ஏகோபித்த விருப்பமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :