பிரபல ஊடகவியலாளரான ஜனதாஸ பீரிஸ் இன்று பிற்பகல் காலமார்.


பிரபல ஊடகவியலாளரான ஜனதாஸ பீரிஸ் இன்று பிற்பகல் காலமார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.

1942 ஜூலை மாதம் 07 ஆம் திகதி பிறந்த அவருக்கு இறக்கும் போது வயது 71 ஆகும். மொரட்டுவை வேல்ஸ் குமார வித்தியாலயத்தில் பாடசாலைக்கல்வியை பூர்த்தி செய்த அவர் களனி பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பாடல் தொடர்பில் பட்டம் பெற்றவராவார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் லேக் ஹவுஸ் ஆகியவற்றின் தலைவராக கடமையாற்றியுள்ள அவர் அச்சு மற்றும் ஊடகத்துறையில் முக்கிய ஊடகவியலாளராக திகழ்ந்தார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலப்பகுதியில் ஜனாதிபதி ஊடகப்பிரிரிவின் தலைவராக கடமையாற்றிய இவர் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்ப்பில் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :