முஷாரபை கைது செய்ய இன்டர்போல் மறுப்பு.



பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரபை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்தநாடு விடுத்த கோரிக்கையை ஏற்க, இன்டர்போல் மறுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் (69), கடந்த 2009ம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி, துபாயில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலையில் சம்பந்தப்பட்ட முஷாரபை கைது செய்ய பிடியாணை நோட்டீஸ் வெளியிட வேண்டும் என்று கோரி, பாகிஸ்தான் சார்பில், சர்வதேச பொலிஸாரான இன்டர்போலுக்கு முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், ‘முஷாரபை கைது செய்யக்கோருவதன் பின்னணியில் அரசியல் உள்ளது. இதனால் இக்கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது’ என்று இன்டர்போல் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆண்டிலும் இதேபோன்ற கோரிக்கையை பாகிஸ்தான் விடுத்தது. அப்போது போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறி, அந்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள இன்டர்போல் மறுத்துவிட்டது.

பாகிஸ்தானில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடுவதற்காக தான் தாய்நாடு திரும்பப் போவதாக முஷாரப் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அவரை கைது செய்வதற்காக பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :