முஸ்லிம் பெண்கள் அணியும் ஒழுக்கமான ஆடைகளை கேவலப்படுத்துவதை விட்டு உங்களவர்கள் வெறும் உள்ளாடைகளுடன் உலாவருவதை நிறுத்துங்கள் -ரிஸ்வி பாரூக்

















நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்துவம் வகையில் ஹிஜாப் பிரச்சினையை பொதுபல சேன அமைப்பு தூண்டி விட்டுள்ளது. இதன் பிரதிபலிப்பாக மன்னம்பிட்டிய பிரதேசத்தில் தபால் நிலையத்தில பணி புரிந்த ஒரு யுவதியின் ஹிஜாப் கழற்றி எறியப்பட்டுள்ளது. இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களினதும் மனதைப் பெரிதும் வேதனைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு முஸ்லிம் கேவலப்படுத்துகின்ற  உச்ச நிலையின் செயற்பாடாக அமைகின்றது என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் தெரிவித்தார்.


மத்திய மாகாண சபை அமர்வு இன்று மத்திய மாகாண சபையின் பதில் தவிசாளர் டி. ஜீ. சிரிசேன தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரிஸ்வி பாரூக் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
இஸ்லிம்கள் இந்நாட்டின் நலன் கருதியும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் துணைபுரிகின்ற நோக்கில் பொது பல சேனாவின் பல்வேறு செயற்பாடுகளை பொறுமையுடன் சகித்துக் கொண்டு வாழ்கின்றனர்.

 ஆனால் முஸ்லிம்கள் இதற்கு அப்பாலும் பொறுமை காக்க வேண்டுமா என்ற கேள்விக்குறி சகல முஸ்லிம்களிடமும் எழுந்துள்ளது.

இஸ்லாமிய மார்க்கப்படி பொருத்தமான உடை அணியும் பெண்களை கேவலப்படுத்துவதை விட இன்று கொழும்பு பிரதேசங்களில் உள்ளாடைகளை ஒத்த அரைகுறை ஆடைகளுடன் உலாவித் திரியும் பெண்களைத் திருத்துவதே காலத்தின் தேவையாகும். இதைவிடுத்து இவ்வாறான கேவலமான செயற்பாடுகளைச் செய்வது ஏன் என இந்த சபையில் கேட்க விரும்புகிறேன்.

எனவே இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தால் முஸ்லிம்களாகிய நாம் இதற்குப் பதிலடி கொடுப்பதற்கு பின்வாங்கப்போவதில்லை என்பதை அவர்கள் வெகு விரைவில்  உணர்ந்து கொள்வார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :