2016-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவில் நடைபெற இருக்கின்றன.
அப்போது, படகுப் போட்டிகளை நடத்த ரியோ டி ஜெனிரோ நகரத்தின் மையப்பகுதியில் ஓடும் பிரிட்டாஸ் ஆறு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் இந்த நீர்ப்பரப்பின் அருகில் ஏசுநாதரின் நினைவுச் சின்னம் அமைந்துள்ளது. இந்த ஆறு இபனிமா, லெபலான் என்ற இரு கடற்கரைகளின் இடையே சென்று கடலில் கலக்கிறது. சென்ற வாரம் பெய்த இடைவிடாத மழையினால், இந்த ஆற்றில் படர்ந்திருந்த பாசிகள் அழுகத் தொடங்கின.
இதன் விளைவாக அங்குள்ள மீன்கள் ஆயிரக்கணக்கில் செத்து மிதந்தன. தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் 100 பேர் போர்க்கால அடிப்படையில் மீன்களை அப்புறப்படுத்தி நீரை சுத்தம் செய்தனர்.
இதுபோல் அப்புறப்படுத்தப்பட்ட மீன்களின் எடை 65 டன்களுக்கு மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
2007-ல் நடைபெற்ற பான்- அமெரிக்கா விளையாட்டுப் போட்டிகளின் படகுப் போட்டிகள் இங்குதான் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment