இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு அநீதி இழைப்பதற்கு நான் இடமளிக்கமாட்டேன். இன்று எங்கள் கட்சியின் மீது முஸ்லிம்களின் ஆதரவுகள் பெருகியுள்ளன. கடந்த ஜனாதிபதியின் தேர்தலின் போது எனக்கு எதிராக தேர்தலில் செயற்பட்ட சில பிக்குகளே முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சியின் பின்னால் உள்ளார்கள். இதனை நான் உணர்ந்தவனாக இருக்கின்றேன். இதன் பின்னால் உள் நாட்டு சக்திகளுடன் சில வெளிநாட்டுச் சக்திகளும் உள்ளதை நான் அறிவேன். எம்முடைய அரசியல் ஸ்திரத் தன்மையை குழுப்புவதே இவர்களின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் அமைப்பின் தலைவர் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையிலான குழுவினர் நேற்று அலரி மாளிகையில் ஜனாபதிபதி சந்தித்த போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் அமைப்பின் தலைவர் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையிலான குழுவினர் நேற்று அலரி மாளிகையில் ஜனாபதிபதி சந்தித்த போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு பிரச்சினை இருப்பதாக நான் ஏற்றுக் கொள்கின்றேன். முஸ்லிம்களுக்கு எந்தவொரு அநியாயமும் இடம்பெற தான் ஜனாதிபதி என்ற வகையில் இடமளிக்க மாட்டேன்.
ஒரு இக்கெட்டான நிலையில் இருக்கும் பொழுது ஜம்மியதுல் உலமா எங்களுடைய எந்தவொரு வேண்டுகோளுமின்றி சுயமாக ஜெனிவாவுக்குச் சென்று அங்கு வருகை தந்திருந்த அரபு நாடுகளை சந்தித்து மிகவும் காருண்ணியமான முறையில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுத் தர பெரும் பங்காற்றியுள்ளனர். நாங்கள் ஒரு போதும் அதனை மறக்க மாட்டோம். ஏதாவது ஒரு இடத்தில் சட்டவிரோதமான சம்பவம் நடைபெறும் போது அது சம்மந்தமாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டால் தகுதி பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மேலும் அங்கு தெரிவித்துள்ளார்.
.
0 comments :
Post a Comment