வெனிசூலாவின் ஜனாதிபதியின் தாயாரை கட்டித்தழுவிய ஈரான் ஜனாதிபதிக்கு அந்நாட்டு மதத்த்லைவர்கள் கண்டனம்.


மறைந்த வெனிசூலாவின்  ஜனாதிபதி ஹியூகோ சாவேஸின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பொருட்டு அங்கு சென்றிருந்த ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத்தால் ஈரானில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இறுதி அஞ்சலி நிகழ்வின் போது சாவேஸின் தாயாரான எலினா ப்ரயஸ் டீ சாவிஸை நிஜாத் கட்டித் தழுவிய படங்கள் வெளியாகியுள்ளமையே குறித்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஈரானின் பழமைவாதக் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் அவரது நடவடிக்கை இஸ்லாத்திற்கு முரணானதென தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

அத்துடன்  நிஜாத் தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும், எந்தவொரு தருணத்திலும் உறவினரல்லாத பெண்ணொருவருடன் இவ்வாறு நடந்துகொள்வது முறையல்லவெனவும் ஈரானைச் சேர்ந்த மதத்தலைவர்களில் ஒருவரான மொஹமட் தாகி ராபர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நிஜாத்தின் குறித்த நடவடிக்கைகள் காரணமாக ஈரானின் ஆன்மீகத்தலைவர்கள் கடும்கோபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெஹ்ரான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக  ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத், வெனிசூலாவின் ஹியூகோ  சாவெஸ்ஸின் மரணத்தை தொடர்ந்து தெரிவித்த அனுதாபச்செய்தி குறித்து ஈரானின் சிரேஷ்ட ஆன்மீகத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஹியூகோ  சாவெஸ் இயேசு கிறிஸ்துவைப்போன்று மீளவும் உயிர்த்தெழுவார் என ஈரான் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களே  குறித்த   கண்டனம் தெரிவிக்கப்பட காரணமாக இருந்திருந்தது.

குறித்த கருத்தானது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கைக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளதாக தெரிவித்தே ஈரானிய மத்தத்தலைவர்கள் கண்டனம் வெளியிட்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :