ஹலால் சான்றிதழை இனிமேல் வினியோகிப்பதில்லை என உலமா சபை எடுத்த தீர்மானம் தொடர்பில் விரிவான விளக்கம் அவசியம் என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று காலை நடைபெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஒரே தொழிற்சாலையில் ஹலால் சான்றிதழ் உள்ள பொருட்களையும் ஹலால் சான்றிதழ் அற்ற பொருட்களையும் உற்பத்தி செய்வது எவ்வாறு சாத்தியமாகும்.
உலமா சபையும் வர்த்தக சம்மேளனமும் இணைந்து மேற்கொண்டுள்ள ஏற்றுமதிப்பொருட்களுக்கு மட்டும் ஹலால், உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கு ஹலால் இல்லை என்ற தீர்மானம் நடைமுறையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இந்நிலையில் ஹலால் சான்றிதழை இனிமேல் வினியோகிப்பதில்லை என உலமா சபை எடுத்த தீர்மானம் தொடர்பில் அவர்கள் விரிவான விளக்கத்தினை வழங்க வேண்டும்.
அத்துடன் இதுவரை ஹலால் சான்றிதழ்களை பெற்றுள்ள வியாபாரிகளும் அது தொடர்பில் தமது நிலைப்பாடுகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.VV
0 comments :
Post a Comment