(எஸ்.அஷ்ரப்கான்)
இலங்கை முஸ்லிம்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கெடுக்கும் இக்காலத்திலும் ஆறு முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்ததன் மூலம் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி அந்நாடுகள் புரிந்து கொள்ளாமைக்கு மக்களால்; தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களின் அரசுக்கு ஆதரவான நிலைப்பாடே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
ஜெனீவா பிரேரணை நிறைவேற்றம் தொடர்பாக முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதிடம் கேட்கப்பட்ட போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ஜெனீவாவுக்கும் இம்முறைக்குமிடையில் முஸ்லிம்களுக்கெதிராக அரச அணுசரணையுடன் பல சம்பவங்ள் நடந்து விட்டன. இந்த நிலையிலும் இவை பற்றி முஸ்லிம் நாடுகளுக்கு தெரியவில்லை என்பதையே இது காட்டுகிறது. பொதுவாக நாடுகளின் அரசாங்கங்கள் பாராளுமன்றத்தில் பேசப்படும் உரைகளையே ஆதாரபூர்வமாகவும் டிப்லோமெட்டிக்காகவும் பார்க்கும். அவற்றையே அவை கவனத்தில் எடுத்துக் கொள்ளும். சாதாரண கட்சிகள் எவ்வளவுதான் முறையிட்டாலும் அவை எடுபடுவதில்லை.
முன்னரெல்லாம் வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் பிரச்சினைகளை எதிர் நோக்கிய போது எமது முஸ்லிம் உறுப்பினர்கள் அறபு நாடுகளுக்கு சென்று எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என கூறிவிடுவார்கள். இந்தத்துரோகத்தை பொறுக்க முடியாமலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவானது. இப்போது மொத்த முஸ்லிம் சமூகமும் இன்னல்களையும், அவமானங்களையும் எதிர் நோக்கும் போது அந்தக்கட்சியும் அதிலிருந்து பிரிந்த கிளைகளும் மௌனமாக உள்ளன. எந்தப்பள்ளிவாயலும் தாக்கப்படவில்லை என்ற அரச கூற்றின் போது முஸ்லிம் தலைமைகள் மௌனமாக இருந்ததன் மூலம் அக்கருத்து சரிதான் என்று ஆமோதித்தன. இதைவிட ஆதாரம் எதையும் முஸ்லிம் நாடுகள் தேடாது.
ஆக மொத்தத்தில் ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகளின் இலங்கைக்கான ஆதரவு முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை குறைக்குமா அல்லது ஏற்கனவே நன்றி கெட்ட இந்த அரசாங்கம் தொடர்ந்தும் முஸ்லிம் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் உதவியுடன் சிங்கள இனவாதிகளுக்கு துணை போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment