(எஸ்.அஷ்ரப்கான்)
முஸ்லிம் விரோத சக்திகளுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க முடியாத முஸ்லிம் தலைவர்களும், அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தற்பொழுது உலமாக்களை குற்றம் சாட்டி அறிக்கை மன்னர்களாக மாறியிருப்பது பெரும் கவலைக்குரிய விடயமாகும் என ஐக்கி தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரச்சாரச் செயலாளர் ஏ. அப்துஸ் ஸலாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கையும் எடுக்க திராணியில்லை.
அரசியல் நடாத்த வியூகம் அமைக்கப்படுகிறது. முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை நம்பியுள்ள முஸ்லிம் சமூதாயத்திற்கு தற்போதய சூழ்நிலையில் எல்லா சந்தர்ப்பங்களிலும் தீர்க்கமான எந்த முடிவுகளும் எட்டப்படுவதில்லை. தங்களின் சுய அரசியல் இலாபங்களே அரசியல் பிரமுகர்களுக்கு முக்கியமானதாகும். பாவம் முஸ்லிம் சமூகம், இன்று இரசியல் அநாதைகளாக உள்ளனர். என அவர் அவ்வறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஹெல உறுமயவிற்கும், பொதுபல சேனவிற்கும் இருந்த உலமாக்களுடைய ஹலால் சூட்சுமமும், பொறிமுறையும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குத் தெரியவில்லை எனபது மிகவும் கேலிக்கூத்தான விடயம். பொதுபல சேனவால் உலமாக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கி ன்ற நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அநியாயமான முறையில் குற்றம் சாட்டி அரசியல் இலாபம் தேட முற்படுவதானது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம்.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் அறிக்கை கூட விடமுடியாத எதிர்கட்சி தவிர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் உலமாக்களின் முதுகின் மேல் ஏறி நின்று பிரச்சாரம் செய்து தங்களது சரிந்துபோன வாக்கு வங்கியை சரிக்கட்ட சரியான நேரம் இதுவென்று மக்கள் முன் தலைகாட்ட தலைப்பட்டுள்ள அரசியல்வாதிகள் பற்றி மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கின்றார்கள்.
இந்த அரசாங்கத்தின் அபிலாசைகளான 18வது திருத்தச்சட்டம், திவிநெகும, ஸிராணி பண்டாரநாயக்காவின் பிரேரணை என்று பல விடயங்களில் பாராளுமன்றத்தில் ஒன்றுபட்டு கை உயர்த்திய அரசியல்வாதிகள் ஏன் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாதத்திற்கு எதிராக ஒன்றுபட முடியாது? முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன்தான் இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற்றுக் கொண்டது.
முஸ்லிம் அரசியல் உறுப்பினர்கள் மறந்துவிடக் கூடாது. முஸ்லிம்களுடைய உரிமை விடயத்தில் பிரிந்து நின்று கதிரைகளை சூடாக்குகின்ற கைங்கரியத்தைத்தான் இந்த அறிக்கை மன்னர்கள் செய்கின்றார்கள்.
உலமாக்களைவிட மக்கள் ஆணையைப் பெற்ற பிரதிநிதிகளுக்கு பொறுப்பு மிகவும் அதிகம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
பல பிரேரணைகளுக்கு முட்டுக் கொடுத்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஹலால் விடயத்தில் ஜனாதிபதியுடன் பேசி முஸ்லிம் மக்களுக்கு சாதகமான ஒரு முடிவைப் பெற்றுத்தந்திருக்கலாம்தானே.
அதைவிடுத்து உலமாக்களின் முதுகில் ஏறி தங்களின் விருப்பு வாக்கு வங்கியை உயர்த்தும் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் நிலையை விட்டு தங்களின் நமது சமூகம் சார் விடயங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். என கேட்டுக் கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment