இந்து மக்கள் கட்சி மாநில அலுவலக செயலாளர் குமரவேல் இன்று இயக்குனர் அமீருக்கு எதிராக சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்த்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டில்,
சினிமா திரைப்பட இயக்குனரான அமீர் அளித்த ஒரு பேட்டியில் தலிபான்கள் என்ற ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை ‘போராளிகள்’ என்று கூறியுள்ளார்.
ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்த தலிபான்களை இப்படி கூறுவது தமிழக இளைஞர்களை அவர்களது அமைப்பில் சேருவதற்கு பிரசாரம் செய்வது போல் உள்ளது. கோவை குண்டு வெடிப்பால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
விஸ்வரூபம் படம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் டைரக்டர் அமீர் பேட்டி அமைந்து உள்ளது.
அவருக்கும், தலிபான்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி பொலிசார் கண்காணிக்க வேண்டும் வெளிநாடு சுற்றுப் பயணத்தின் போது அவர் தலிபான்கள் யாரை யாவது சந்தித்தாரா? என்று விசாரிக்க வேண்டும். அமீர் மீது பொலிசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் இயக்குனர் அமீர் தரப்பு கருத்துக்களை அறிய முற்பட்ட போதும் இதுவரை அது சாத்தியப்படவில்லை.
.
0 comments :
Post a Comment