அமைச்சர்களான ஏ.எச்.எம்.பெளசி, ரவூப் ஹகீம் , ரிஷாட் பதியுத்தீன் மற்றும் அதாவுல்லாஹ் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இன்று கலந்துரையாடியுள்ளனர்.
அமைச்சரவை கூட்டத்தின் பின்னரே இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுத்தப்படும் சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டதாக அறிய முடிகிறது.
ஹலால் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் முஸ்லிம்கள் மீது சுமத்தப்ட்டு இன நல்லிணக்கத்துக்கு பாதகம் ஏற்படும் வகையில் சில குழுவினர் செயற்பட்டுவரும் நிலையில் , ஏற்கனவே அவை தொடர்பில் பாதுகாப்பு செயலாளர், அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினரிடமும் ஜனாதிபதியிடமும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் முஸ்லிம்கள் சமகாலத்தில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் குறித்த அமைச்சர்கள் நால்வரும் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment