கல்முனை பிரதேச செயலக விளையாட்டு விழா


(மருதுர் அஷ்ரப்கான்)
கல்முனை பிரதேச செயலக விளையாட்டு விழா நேற்று (09) கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு அதிகாரி ஏ.எம்.எம். றஸீன் தலைமையில் ஆரம்பமானது.
கல்முனை பிரதேச செயலக விளையாட்டு போட்டியில் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட 20 விளையாட்டுக்கழகங்கள் பங்கு பற்றின.
இந்த விளையாட்டு ஆரம்ப விழாவிற்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ், ஓய்வு பெற்ற மாவட்ட விளையாட்டு அதிகாரியும், அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் சங்க தலைவருமான எம்.ஏ.நபார் கல்முனை பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.எல். ஜவ்பர் மற்றும் விளையாட்டுக்கழகங்களின் தலைவர்கள், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்

ஆரம்ப போட்டியாக அணிக்கு 6 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் அரையிறுதிப்போட்டிக்கு கல்முனை சனிமவுண்ட், ஹரி கெய்ன்ஸ், ஜிம்கானா, மருதமுனை யுனிவர்ஸ் ஆகிய  விளையாட்டுக்கழகங்கள் தெரிவாகின. அதில் இறுதிப்போட்டிக்கு கல்முனை  சனிமவுண்ட், ஜிம்கானா ஆகிய கழகங்கள் தெரிவு செய்யப்பட்டன.
இறுதிப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய  கல்முனை சனிமவுண்ட் விளையாட்டுக்கழகம்  முதலில்துடுப்பெடுத்தாடியது. இதன்போது சனிமவுண்ட் விளையாட்டுக் கழகம் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 52 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜிம்கானா விளையாட்டுக்கழகம் 13 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
39 ஓட்டங்களால் வெற்றியீட்டிய கல்முனை  சனிமவுண்ட் விளையாட்டுக்கழகம் கல்முனை பிரதேச செயலகத்தின்2013ம் அண்டுக்கான சம்பியனாக தெரிவானதுஇப்போட்டியின் சிறப்பாட்டக்காறராக கல்முனை  சனிமவுண்ட்விளையாட்டுக்கழகத்தின் றிஸ்வான் தெரிவானார்.
இந்த போட்டியின் நடுவர்களாக ஏ.வி. எம். பைஸால், எஸ்.எல்.எம். றியாஸ் ஆகியோர் கடமையாற்றினர். 
இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் கலந்துகொண்டதுடன் இப்போட்டிகளுக்கான பூரண அனுசரணையினை கல்முனை பெஸ்டர் நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.


எதிர்வரும் மார்ச் 13ம் திகதி உதைப்பந்தாட்ட போட்டிகளும், மெயவல்லுனர் போட்டிகள் வரும் ஏப்ரல் 13ம் திகதியும் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டு அதிகாரி ஏ.எம்.எம். றஸீன் கூறினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :