பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வைகோவின் நடைபயண நிறைவு பொதுக்கூட்டம்!




எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி பங்கேற்பு
 
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்ந்து  போராடி வருகிறது. 

கடந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் 17 வரை தமிழக முழுவதும் மனித சங்கிலி, ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, தலைமைச் செயலகம் முற்றுகை போன்ற போராட்டங்களை வீரியமாக நடத்தியது. 

கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் மட்டும் பங்கேற்ற மாபெரும் பேரணியை திருச்சியில் நடத்தியது. 

 மேலும் அடுத்த மாதம் மதுரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தி வருகின்ற மாவட்ட மாநாடுகளின்  முக்கிய கோரிக்கைகளில் ” பூரண மதுவிலக்கை அமுல்படுத்து ”என்பதனை முதன்மைப்படுத்தி  வருகிறது. 

இதுபோன்றே பல்வேறு கட்சிகளிலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர். 

பா.ம.க, ம.ம.க போன்ற கட்சிகளின் வரிசையில் தற்போது ம.தி.மு.க வீரியமான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் தற்போது இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளது. 

வைகோ நான்கு கட்ட நடைபயணத்தை அறிவித்து முதல்கட்ட நடைபயணத்தை கடந்த மாதம் நெல்லை மாவட்டம் உவரி முதல் மதுரை வரை 400 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டார். 

 கடந்த பிப்ரவரி 18ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கோவளத்திலிருந்து 2ம் கட்ட நடைபயணத்தை துவக்கிய வைகோ, 11 நாட்கள் 250 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு 28 ம் தேதி மறைமலை நகரில் நிறைவு செய்தார். 

இதையொட்டி மறைமலை நகரில் நடைப்பயண நிறைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று  நடைபெற்றது.

இதில் எஸ்.டி.பி.ஐ  கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். 

மேலும் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் மற்றும் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக வைகோ உரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

B.S.I.கனி 
மாநில பொருப்பாளர்
செய்தி ஊடகத்துறை 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :