இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன. அமெரிக்க பிரேரணைக்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தியா இப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
இந்தோனேசியா, கட்டார், பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத்,மாலைதீவு, மொரிடானியா ஆகிய முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும் அமெரிக்க பிரேரணைக்கு எதிராகவும் வாக்களித்துள்ளன.
இதேவேளை லிபியா இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளதுடன் கஸகஸ்தான் , மலேசியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment