தமிழ் நாட்டில் தாக்கப்பட்ட பிக்கு கட்டுநாயக்காவில் வைத்து குறிப்பிட்டவை.


இலங்கை தேரர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் உலகிற்கு காட்டவேண்டும் என்பதே என்னை தாக்கியவர்களின் நோக்கமாக இருந்தது என்று சென்னை ரயில் நிலையத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளான பிக்கு தெரிவித்துள்ளார்.

சென்னையில் ரயில் நிலையத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளான வடுபொல வங்கீச தேரர் நேற்று மாலை நாடு திரும்பினார்.

அவரை அழைத்து வருவதற்கு பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றனர்.

இலங்கை வந்த பௌத்த பிக்கு, தம்மை தாக்கியவர்களின் நோக்கம் குறித்த இவ்வாறு விளக்கமளித்தார்.

தமது உடலில் சிராய்ப்புகளோ, காயங்களோ உள்காயங்களோ ஏற்படவில்லை. இலங்கை தேரர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் உலகிற்கு காட்டவேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது.

எனது சம்பவத்திற்கு பின்னர் புத்தகாயாவுக்கு செல்லும் இலங்கை யாத்திரிகர்கள் விமான நிலையத்தில் இருந்து சென்னை மாபோதிக்கும் அங்கிருந்து ஏனைய யாத்திரை தளங்களுக்கும் கொண்டுச் செல்லப்படுவார்கள்.

இதன்போது அவர்களுக்கு அதிக பாதுகாப்பு தரவேண்டியது அவசியமாகின்றது. எனவே தமிழக அரசும், இலங்கையும் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட செய்தி இதுதான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :