இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்க சர்வதேச அமைப்பொன்றை நிறுவ முயற்சி!

சுலைமான் ராபி.

நட்டாற்றில் விடப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதை நோக்காகக் கொண்டு சர்வதேச மட்டத்தில் பலம் வாய்ந்த அமைப்பொன்றை நிறுவுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக உலகின் நாலா பாகங்களிலும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படுகிறது.

OVERSEAS CEYLON MUSLIM COMMUNITY என்ற பெயரில் இயங்க உத்தேசிக்கப்பட்டுள்ள இவ் அமைப்பின் தற்காலிக பேச்சாளாரான கௌஸ் முஹமத் கருத்து தெரிவிக்கையில்;

‘இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தலின் அவசியம் இன்று எம்மத்தியில் எழுந்துள்ளது
இதனை முன்னெடுக்கும் முகமாக சர்வதேச ரீதியாக பலம் வாய்ந்த அமைப்பினாலேயே இதனை மேற்கொள்ள முடியும் என பலராலும் இன்று உணர்த்தப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இவ்வளவு காலமும் நடத்திய போராட்டம் கேள்விக்குறியாக்கபட்டுள்ள ஒரு சந்தேகம் எம் எல்லோர் மத்தியிலும் எழுகின்றது. முஸ்லிம்களின் பாதகாப்பு தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் முன்டுக்கும் வேலைத் திட்டம் போதுமானதாக இல்லை. அதற்க்கான ஏற்பாடு ஏதுவுமே இல்லாமல் வாய் மூடி மௌனியாக இருப்பதன் மூலம் எம் சமூகம் நாதியற்று விடும் என்ற அச்சம் மேலோங்கி இருக்கும் இந்த சூழலில் எமக்காக போராடக்கூடிய சர்வதேச ரீதியிலான அமைப்பை அவசர அவசரமாய் உருவாக்க வேண்டிய தேவை ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் திணிக்கபட்டிருக்கிறது.

சிறந்த தலைமைத்துவங்கள் மூலம் இதற்குத் தீர்வு காண முடியும். எனினும் துரதிஷ்டவசமாக இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத் தரக்கூடிய சிறந்த தலைமைத்துவம் இல்லையென்றே கூற வேண்டும்.அது தனிமனித அரசியலினால் சாத்தியமாகாது என்பதும் புரியப்பட்ட விடயமகும்.

இவ்வாறான மத ரீதியான பிரச்சினைகளின் போது சமூகங்களிடையே ஒருமைப்பாட்டினைத் தோற்றுவிக்கும் வகையில் பரந்துபட்ட விரிவான தலைமைத்துவமொன்று எம்மிடையே காணப்படவில்லை. இவ்வாறான மிகச் சிறந்த தலைமைத்துவமொன்று இருந்தால் தற்போதைய பிரச்சினைகளுக்கு மிக இலகுவில் தீர்வுகள் வழங்கப்பட்டிருக்கும்.

இந்த குறைபாட்டை நிவர்த்திக்கும் முகமாக சர்வதேச ரீதியில் பலம் வாய்ந்த அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பாதுகாப்பு, அவர்களின் அன்றாட நடவடிக்கை தொடர்பிலான அடிப்படை உரிமையினை பாதுகாத்தல்இ அவர்களின் வாழ்வுரிமையினை உறுதிப்படுத்தல், இனத்துவ அடையாளத்தினை உரிமையோடு பேணுதல் போன்ற அடிப்ப்படை எண்ணக்கருக்களை கொண்டு சர்வதேச ரீதியில் செயற்படுவதற்கான அரம்ப கட்ட ஏற்பாடுகளை ஜெனீவாவை தலைமையகமாக கொண்டு இயங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருவதொடு இக்கட்டான கால சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்களிடத்தில் இதற்காக ஒன்றுபடுமாறு இவ் அழைப்பினை விடுக்கிறோம்

இதன் முதற்கட்டமாக நேற்றைய தினம் சிறு சந்திப்பொன்றை பாரிஸ் வாழ் இலங்கை முஸ்லிம் மக்களிடத்தில் நடாத்தினோம். இதன்போது முழுமையான ஆதரவும் அவசியமும் குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கையை சேர்ந்த பல முஸ்லிம் சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

இவ் அமைப்பின் மூலம் இலங்கையை சேர்ந்த வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்கள் இதில் ஒன்றிணைந்து செயற்பட முடியும். தொழில் புரிவோர், மாணவர்கள், வர்த்தகர்கள் என அனைவரும் இதில் ஒன்றிணைந்து உங்களின் மேலான கருத்துக்கள் சமர்பிக்கலாம்’ அத்துடன் எம்மை கீழ் வரும் மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொண்டு உங்களின் மேலான ஒத்துழைபினையும் ஆலோசனைகளையும் உங்கள் ஆதரவினையும் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்புகளுக்கு
OVERSEAS CEYLON MUSLIM COMMUNITY
ஈமெயில் – ocmcge@gmail.com
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :