திருக்கோவில் பிரதேசத்திற்கான கலாசார மண்டம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் இன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கோபலரெட்ணம் தலைமையில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் அழைப்பிற்கமைவாக கலை,கலாசார அமைச்சர் டீ.பி.ஏக்கநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டிவைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டாக்டர் துரையப்பா நவரெட்ணராஜா,கலை,கலாசார அமைச்சின் செயலாளர் வசந்த ஏக்கநாயக்க உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கல்வியமைச்சினால் தேசிய ரீதியாக நடத்தப்பட்டநடன முத்ரா போட்டியில் முதலிடம் பெற்ற தம்பிலுவில் மகா வித்தியாலய மாணவி த.லுவேனுஜாவுக்கு அமைச்சர் நடனத்தாரகை பட்டம் வழங்கி கௌரவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவின் ஏற்பாட்டில் கலை கலாசரா அமைச்சு
இக் கலாசார மண்டம் அமைப்பதற்காக 12 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment