(எஸ்.எம்.அறூஸ்)
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் கிரிக்கட் வீரர் நிக்ஸி அஹமட் இன்று அகில இலங்கை ரீதியாக நடைபெற்று வருகின்ற பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு கிரிக்கட் சுற்றுப் போட்டியில் மிகத்திறமையாக விளையாடி வருகின்றார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் ஆரம்ப பந்து வீச்சாளராகவும் நிக்ஸி விளையாடி வருகின்றார். துடுப்பாட்டத்தில் 14 போட்டிகளில் கலந்து கொண்டு 737 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 94 பவுண்டரிகளும், 40 சிக்சர்களும் அடங்கும். பந்து வீச்சில் 24 விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.
இலங்கையின் மிகச்சிறந்த பாடசாலைகளுக்கெதிராக கூடுதலான ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு அதிகூடிய சிக்சர்களையும் அடித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த நிக்ஸி அஹமட் கொழும்பு பிரதேசத்தில் இவ்வாறு அதீத திறமைகளை வெளிக்காட்டுவது முழுக்கிழக்கு மாகாணத்திற்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் பெருமை தரும் விடயமாகும்.
முன்னாள் இந்திய கிரிக்கட் வீரரான மனோஜ் பிரபாகர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும், ஆரம்ப பந்து வீச்சாளராகவும் விளையாடி நட்சத்திர வீரராக வலம் வந்ததை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்திப் பார்க்கலாம். இவ்வாறனதொரு நிலைக்கு நிக்ஸி அஹமட் எதிர்காலத்தில் முன்னேரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நமது சொந்தங்கள் அற்புதமான திறமையை வெளிப்படுத்தி வருகின்ற நிக்ஸி அஹமட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பினை வழங்க வேண்டும். கிழக்கு மண்ணின் தனயன் இலங்கைத் தேசிய அணியில் விளையாடுகின்றான் என்ற மயிர் கூச்சரியும் சாதனையைப் படைக்க நாம் எல்லோரும் கைகொடுத்து உதவ வேண்டும்.
அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாரை மாவட்ட உதவி சாரண ஆணையாளருமான எஸ்.எல்.முனாஸ் நிக்ஸி அஹமட்டின் நிந்தவூர் வீட்டிற்கு சென்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் அவரது பெற்றோருக்கும் நன்றியையும் தெரிவித்தார்.
அத்தோடு எதிர்காலத்தில் நிக்ஸியின் முன்னேற்றத்திற்கு உதவி செய்வதாகவும் குறிப்பிட்டார். இங்கு பிரதேச சபை உறுப்பினருடன் நுஜா ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் அவர்களும் சென்று நிக்ஸியைப் பாராட்டினார்.
அத்தோடு எதிர்காலத்தில் நிக்ஸியின் முன்னேற்றத்திற்கு உதவி செய்வதாகவும் குறிப்பிட்டார். இங்கு பிரதேச சபை உறுப்பினருடன் நுஜா ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் அவர்களும் சென்று நிக்ஸியைப் பாராட்டினார்.
0 comments :
Post a Comment