ஒழுங்கமைக்கபடாத ஹர்த்தால் – இன்னுமொரு சமூதாய பின்னோக்கல்


சாய்ந்தமருது ஹனீஸ் முஹம்மத்


இலங்கை முழு மக்களாலும் குறிப்பாக சகோதர இன மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயம் நடந்து முடிந்த முஸ்லிம்களின் சாத்வீக போராட்டம்,ஹார்த்தால் கடையடைப்பு ஆகும். இதனூடக என்ன நடக்கும்? என்னவென்ன விளைவுகளை தோற்றுவிக்கும்.

வடகிழக்கை தவிர்ந்த பெரும்பான்மையின் மத்தியில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டாக்கிய இந்த சாத்வீக போராட்டம்,ஹார்த்தால் கடையடைப்பு ஆங்காங்கே மழை பெய்யும் என்கின்ற வானிலை அறிக்கை போல் நடந்து முடிந்து விட்டது.
ஏன் இந்த போராட்டம் என்பதை விட ஏன் இந்த போராட்ட வடிவம்? சாத்வீக முறையில் எத்தனையோ போராட்டங்கள் இருக்கும்போது ஏன் இந்த தெரிவு, நமது அடிப்படை கடமைகளை முடக்கி, நமது நிலைமைகளை அசாதாரணமாக மாற்றி, நமது பகுததிக்குள் படையினரை உள்வாங்கி, நமது வர்த்தகத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தடங்கல்களை கொடுத்து இப்படியான போராட்டாம். அதுவும் முறைமை படுத்தப்படாத போராட்டம்.
உள்நாட்டு வர்த்தகத்தில் முஸ்லிகளின் பங்கானது பெரும் பங்காக இருக்கின்றதை இனவாதிகள் மனதால் சமரசம் கொள்ளமுடியாத ஒன்றாகும்.

பெருபான்மை மக்கள் விரும்பியோ விரும்பாமலோ முஸ்லிகளின் உள்நாட்டு வர்த்தகத்தில் தங்கியுள்ளார்கள் என்பது மற்றுமொரு உண்மையாகும்.இந்த நிலைமையை  பயன்படுத்தி பெரும்பான்மை மக்களை பயமுறுத்துவதா, இது ஒரு ஏற்று கொள்ள முடியாத செயலாகும்.இந்த கடையடைப்பு.

நாடு பூராகவும் இந்த ஹர்த்தால் நடைபெற்று இருந்தால் கடை உடைப்பு, கடை எரிப்பில் தொடங்கி இனக் கலவரத்தில் முடிந்து இருக்கும். இறைவன் அருளால் அப்படி ஒரு சந்தர்ப்பம் இனவாதிகளுக்கு கிடைக்கவில்லை, வடகிழக்கை தவிர்ந்த ஏனைய பகுதி முஸ்லிம்கள் சில அரசியல்வாதிகளின் வழி காட்டுதலால்  நல்லதொரு முடிவை எடுத்து இருக்கிறார்கள், ஆனால் அவர்களும் ஹர்த்தால் என்ற முடிவு எடுத்து இருந்தால் இனவாதிகளுக்கு ஒரு சந்தர்ப்பம் நிச்சயமாக கிடைத்து இருக்கும்.  

வடகிழக்கு முஸ்லிம்கள், முஸ்லிம்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஏதாவது செயற்பாட்டில் இறங்கும்போது மற்றைய பகுதி முஸ்லிம்களை கவனத்தில் எடுத்து செயற்பாட்டில் இறங்க வேண்டும் நமது செயற்பாடானது எந்த அளவு மற்றைய முஸ்லிம் சகோதரர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும். ஏனென்றல் மிக பாதிப்புக்கு உள்ளாவது அவர்கள்தான்.

முஸ்லிம் அரசியல்வாதிகளும் மிக ஆழமாக ஆலோசித்து, யோசித்து எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லவேண்டும், ஆனால் சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவும் அவர்களின் போக்கும் இச் சமூகத்தினை படுகுழியில், கொலை களத்தில் கொண்டுவிட்டு விடுமோ என்று பயம்கொள்ள வைக்கிறது, குட்டி ஆடு எப்படி கொழுத்தாலும் வழுக்கள் வழுக்கல்தான்  என்னும் பழமொழியை உயிர்ப்பிக்கின்றது.

இவர்களின் செயற்பாடு. திட்டமிட்டு ஆத்மா சுத்தியோடு  செய்யாத எந்த காரியமும் சமூகத்திற்கு நன்மை பயக்காது, மாறாக பின்விளைவுகளைத்தான் கொண்டுவரும் இந்த ஹர்த்தாலும் அப்படியான சூழ்நிலையத்தான் உருவாக்கி இருக்கின்றது. தென், மேற்கு, மத்திய பகுதிகளில் ஹர்த்தால் இல்லை வட கிழக்கில் மட்டும் ஹர்த்தால் அனுஷ்டிக்க பட்டது, இச் செயற்பாட்டின் விளைவு என்னவாக இருக்கும் என்பது போக போகத்தான் தெரியும். வடகிழக்கு முஸ்லிம் பகுதிகளில் இராணுவம் நிரந்தரமாக அமர்த்த படலாம், இராணுவத்தின் திடீர் சோதனைகளுக்கு முஸ்லிம் பகுதிகள் உள்ளாக்க படலாம். 

இன்னும் சொல்லப்போனால் அரசாங்கத்தின் கழுகு பார்வைக்கு வடகிழக்கு முஸ்லிம்கள் உள்ளாகி இருக்கிறார்கள், இனி அரசாங்கம் வட கிழக்கு முஸ்லிகளின் செயற்பாடுகளை எப்படி கட்டுப் படுத்துவது என்று யோசிக்க இடம் கொடுத்து விட்டது.

மிக கவலையனதும்,வேடிக்கையானதும், முஸ்லிம்களின் பிரச்சினைகள் இப்போது ஒரு தனி மனித அரசியல் அந்தஸ்தை நிலை நாட்டுவதற்கும், மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை ஊடுருவ செய்வதற்குமான  கருவியாக மாறிவிட்டது. தனது சுய இலாபத்திற்காக சமூதாயத்தை விலையாக கொடுக்கின்ற இவர்களைமுஸ்லிம் சமூகம் அடையலாம் காண்பதற்கு மிக விழிப்பாக இருக்க வேண்டும்.


இப்படியான குட்டி ஆடு செயற்பாடுகள் முக்கியமான தருணத்தில் இன்னுமொரு சமூதாய பின்னோக்கலுக்கு வழி கோரிவிட்டது.
இனியாவது முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது தனி மனித செயற்பாடுகளை தவிர்த்து ஒரு குரலில் ஒரே குடையின் கீழே செயற்பட வேண்டும் என்பது தான் எல்லா முஸ்லிம்களின் அவாவாக இருக்கின்றது.

                                                                                          
சாய்ந்தமருது ஹனீஸ் முஹம்மத்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :