ஹலால் இலச்சினை எந்தவொரு பொருளிலும் பொறிக்கப்படாதுஉறுதிப்படுத்தும் வகையில் விசேட பொலிஸ் பிரிவு



இலங்கைச் சந்தையில் ஹலால் இலச்சினை இதன் பிற்பாடு எந்தவொரு பொருளிலும் பொறிக்கப்படாது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பொலிஸ் பிரிவு ஒன்றை அமைத்து சோதனைகள் மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தம்மிடம் உறுதியளித்துள்ளதாக பொது பல சேனா தெரிவித்துள்ளது.
கண்டியில் நடைபெற்ற பொது பல சேனாவின் பொதுக் கூட்டத்திலேயே அதன் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
.
ஹலால் சான்றிதழுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வென்று விட்டோம். அந்த வெற்றி குறித்த செய்தியை தலதா மாளிகை ஹாமதுருக்களிடம் சொல்வதற்காகவும் எதிர்காலத்தில் சிங்கள மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முன்னெடுக்கவுள்ள எமது போராட்டத்திற்கு ஆசி பெறவுமே நாம் இன்று வரலாற்றுப் புகழ்மிக்க கண்டிக்கு வந்திருக்கிறோம் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
தனது உரையில் சில ஆங்கில ஊடகங்களை பெயர் குறிப்பிட்டு சாடிய அவர், குறித்த ஊடகங்கள் தமது அமைப்பை தீவிரவாத அமைப்பாக தொடர்ச்சியாக சித்திரித்து வருவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார்.VV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :