முஸ்லிம் காங்கிரஸில் புதிதாக இணைந்து கொண்டவர்களுக்கு அங்கத்துவ அடையாள அட்டை வழங்களும் சமாதான நீதவான்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது மை பவுண்டேஷன் ஏற்பாட்டில் இன்று அதன் காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் அங்கத்துவத்திற்கான தேசிய பணிப்பாளரும், அம்பாறை மாவட்ட பொருளாளருமான அல்-ஹாஜ் ஏ.சீ.யஹியாகான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் அல்-ஹாஜ் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அல்-ஹாஜ் ஏ.சீ.யஹியாகான் அங்கத்துவ அடையாள அட்டையினையும், சமாதான நீதிவான்களுக்கான நியமனக் கடிதங்களையும் வழங்கி வைத்தார்.
0 comments :
Post a Comment