தேசிய அரசாங்கம் அமைக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் எதிரணிகள்.


TM-முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உட்பட எதிரணி கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளனர்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிரணி கட்சிகளின் தயாராக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க உட்பட ஆளும் எதிர் கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் எஸ்.பி.திசாநாயக்க உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவர்கள் "வேற்றுமையில் ஓற்றுமை" எனும் தொனிப்பொருளிலான கருத்துக்களம் நிகழ்விலேயே கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ஐக்கிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெய்க் ஹில்டனில் பிற்பகல் 1.30 மணியிலிருந்து இடம்பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :