இலங்கையில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதை ஒருபோதும் அரசு அனுமதிக்காது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஜனாதிபதியின் மனித உரிமைகள் தொடர்பான பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜெனிவாவிலிருந்து பி.பி.சி. சிங்கள சேவைக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் முஸ்லிம்கள் திட்டமிடப்பட்ட முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாவதாகக் கூறப்படுவதை அரசு முற்றாக நிராகரிக்கிறது. இவ்வாறு இலங்கையில் முஸ்லிம்களுக்கு பிரச்சினை உள்ளதாக ஜெனிவாவில் சில அரச சார்பற்ற நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் 'முஸ்லிம் பிரச்சினை' ஒன்று இல்லை. அவ்வாறு பிரச்சினை இருப்பதாக கூறப்படுவது சில அடிப்படைவாத குழுக்களின் பிரச்சாரமே.
முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை அரசு ஒரு போதும் அனுமதிக்காது.
இலங்கையிலும் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். எனினும் அவர்களுக்கு அரசு பின்புலமாக இருக்கவில்லை என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன்.
பொது பல சேனாவின் ஹலால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அரசு ஒரு போதும் அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
.
0 comments :
Post a Comment