வடக்கு, கிழக்கில் மற்றும் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று கல்முனை பிரதேசத்தில் இன்று ஹர்த்தால் -படங்கள் இணைப்பு.




(படங்கள்: எம். பைஷல் இஸ்மாயில், சுலைமான் ராபி )

அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று (2013.03.25) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டன.

இதில் எல்லா மக்களும் பங்கேற்று  தங்களின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமலும், அரச மற்றும் அரச சார்பற்ற  காரியாலயங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கடமைக்குச் செல்லாமல் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த ஹர்த்தால் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள், அரச, அரசசார்பற்ற காரியாலயங்கள் என்பன மூடப்பட்டுட்டு காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

அத்துடன் வாகனப் போக்குவரத்துக்களும் இஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் ஓரிரு பஸ்கள் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் சென்று வருவதையும் இங்கு அவதானிக்கக் கூடியதாகவும் உள்ளது.

  ஹர்த்தால் கடையடைப்பை இன்று மேற்கொள்ள வேண்டாம் என நேற்றிரவு முதல் அடிக்கடி பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளிலும் ஏனைய குறுஞ்செய்திச் சேவைகளுக்கூடாகவும் தகவல்கள் கூறப்பட்டிருந்தபோதும் அவை புறக்கணிக்கப்பட்டு முழுமையான ஹர்த்தால் இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
 தவணைப் பரீட்சை காரணமாக பாடசாலைகள் வழமைபோன்று இயங்குகின்றன.



காத்தான்குடி நகரில் வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுச் சந்தை  அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பாடசாலைகளும் அரச அலுவலகங்களும் வழமைபோன்று இயங்குகின்றன. போக்குவரத்துக்கள் வழமைபோன்று இடம்பெறுகின்றன.
ஹர்த்தாலில் ஈடுபட வேண்டாம் என நேற்றிரவு காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனமும் ஜம்இய்யதுல் உலமாவும் இணைந்து பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளின் அறிவித்தல் விடுத்திருந்தன. அத்துடன் இன்றைய தினம் வர்த்தக நிலையங்களை மூட வேண்டாம் என பொலிசாரும் இராணுவத்தினரும் இப் பிரேதச வர்த்தகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடம் வேண்டுகோள்விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

கல்முனை நகர் ஹர்த்தால் காரணமாக வெறிச்சோடியிருக்கிறது. சகல தனியார் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளும் அரச அலுவலகங்களும் வழமைபோல் இயங்குகின்றன. போக்குவரத்து வழமைபோன்று இடம்பெறுகின்றது. இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் பல முஸ்லிம் பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண நகரின் முஸ்லிம் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :