அமெரிக்காவிற்கு எதிராக யாழ். நகரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
'எங்கள் வீட்டுப் பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் அமெரிக்காவே வாயை மூடு", “எங்கள் தானைத் தலைவர் மகிந்த ராஜபக்சவே” போன்ற வசனங்கள் எழுதப்பட்டு காணப்படுகிறன.
யாழில் பல்வேறு இடங்களில் இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்படுகின்றன. இதன் முடிவில் மக்கள் முன்னணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை எதிர்த்து கிளிநொச்சியிலும் மன்னாரிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment