முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டியில் மாடு அறுக்கத்தடை -முஸ்லிம் மக்கள் கட்சி விசனம்.


(கல்முனை நிருபர்)

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டியில் 148 வருடங்களாக இருந்த மாட்டுத்தொழுவம் நீக்கப்பட்டமை அமைச்சர் ஹக்கீமின் கையாலாகா தன்மையை காட்டுகிறது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,

கண்டியில் இருந்த மாட்டுத்தொழுவம், சுற்றாடலுக்கு கேடு என்பதை வைத்து அகற்றப்பட்டிருக்குமானால் அதனை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் மக்களை நாசமாக்கும் சாராயத்தவறணைகள் பரவலாக அனுமதிக்கப்பட்டிருக்கும் கண்டியில் முஸ்லிம் மக்களுக்கெதிரான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மேற்படி மாட்டுத்தொழுவம் நீக்கப்பட்டமையும் அதுபற்றிய ரஊப் ஹக்கீமின் மௌனமும் கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த நாட்டு முஸ்லிம்களின் பெரும்பாலான வாக்குகளை பெற்ற கட்சியின் தலைவரது மாவட்டத்தில் மாட்டுத்தொழுவம் ஒன்றுக்கு 148 வருடங்களாக இருந்த உரிமை நீக்கப்பட்டுள்ளமையின் மூலம் பதவிகளுக்கு சோரம் போய்விட்ட முஸ்லிம் காங்கிரசின் அடிமைத்தனமான அரசியல் நிலைப்பாடு வெளிக்கொணரப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு தலைவரால் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லி;ம்களின் கௌரவத்தை காப்பாற்ற முடியுமா என்பதை முஸ்லிம் சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் ஏனைய தலையாட்டி பொம்மைகளான முஸ்லிம் கட்சிகளையும் பாராளுமன்றத்தில் வைத்துக்கொண்டே இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் ஒவ்வொரு உரிமையையும் நீக்கிக்கொண்டிருக்கிறது. கடைசியில் முஸ்லிம் அமைச்சர்கள் நக்கிக்கொண்டிருக்கும்  எலும்புத்துண்டுகளுக்கும் ஆபத்து வரும் என்பதை இங்கு நாம் சொல்லி வைக்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :