ஹலால் முடிந்து விட்டது அடுத்தது ஹிஜாப் -பொது பலசேனா

ஹலால் விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் இதுவே எமது இலக்காக இருந்தது. இது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அடுத்து முஸ்லிம் பெண்களின் அபாயா தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என பொது பல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் பெளத்த மகா சங்க தேரர்களும் மற்றும் இலங்கை வர்த்தக சங்க சம்மேளனமும் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட ஹலால் விவகார தீர்மானம் தொடர்பில் கருத்து வினவியபோதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;-

ஹலால் உணவை உண்ணுவதற்கு உலமா சபை எம்மை பலவந்தப்படுத்தியது. இது ஒரு பெளத்த நாடு. பெளத்தர்கள் ஹலால் உண்ணத் தேவையில்லை. இந்நாட்டிலிருந்து ஹலாலை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. இந்த நியாயத்துக்காகவே நாம் போராடினோம் வெற்றியும் பெற்று விட்டோம்.

அடுத்து முஸ்லிம் பெண்களின் அபாயா தொடர்பில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உங்களது பொதுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதே என்று  வினவிய போது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

ஆம், நாட்டில் 30 வருட கால யுத்தத்தில் நாம் பல இழப்பிணைச் சந்தித்து விட்டோம். மீண்டும் அவ்வாறான நிலை உருவாகக் கூடாது. பயங்கரவாதம் எந்த ரீதியிலும் முன்னெடுக்கப்படலாம் எமக்கென்று ஒரு கலாசாரம் இருக்கிறது. அபாயா உடை மூலம் பயங்கரவாத செயல்கள் முன்னெடுக்கப்படலாம் எனவே இதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.

இம்போட்மிரரின் குரல்: ஆடை விடையத்தில் இலங்கையின் மானத்தைக்காத்துக்கொண்டிருப்பது இன்று முஸ்லிம் பெண்கள்தான் அதனை எப்படியோ மாற்றி துறவிகள் எல்லாம் இலேசாக எல்லாத்தையும் பார்க்க கூடியமாதரி மாற்றினால் நன்றாக இருக்கும் என்றுதான் இன்று முஸ்லிம்கள் அணியும் உடை விடையத்தில் தலையிட்டிருப்பது. முஸ்லிம் பெண்கள் விடையத்தில் தலையிட எந்த மதத்தில் உள்ளவனுக்கும் என்ன தேவை இருக்கிறது என்று கேட்கிறது இம்போட்மிரர் உங்களுக்கும் சரியாகப்பட்டால் கீழே பேஸ்புக்கில் ஒரு லைக் பன்னிட்டு போங்கள்.
 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :