கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இன்று கொரியா பயனமானார்.

(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இன்று (06.03.2013) மதியம் இரண்டு மணியளவில் கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொரியா பயனமானார்.

ஆசிய மன்றம் உள்ளூராட்சி மன்றங்களில் நடைமுறைப்படுத்தி வரும் கொய்கா செயற்திட்டத்தின் கீழ் கொரிய நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூர் பொருளாதார ஆட்சி அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான  கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காகவே முதல்வர் கொரியா பயணித்துள்ளார்.

மேற்படி கலந்துரையாடல் 07ம் திகதி முதல் 22ம் திகதிவரை நடைபெற ஏற்பாடாகி உள்ளதாகவும் இதன்போது கொரியாவில் உள்ள உள்ளூராட்ச்சி மன்றங்களின் நடைமுறைகள் தொடர்பாகவும் அங்குள்ள நகர அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதி, திண்மக் கழிவு மற்றும் வருமான முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட உள்ளதாகவும் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீட் மற்றும் கிழக்கு மகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் பயணிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :