கிழக்கு மாகாண ஆளுநர் நிந்தவூர் விஜயம்


(சுலைமான் றாபி) 

கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரர் மொஹான் விஜே விக்ரம அவர்கள் எதிர்வரும் 26.03.2013ம் திகதி செவ்வாய்க்கிழமை நிந்தவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். 

நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெப்பை அவர்களின் முயற்சியின் கீழ் JICA திட்டத்தின் நிதி ஓதிக்கீட்டு அனுசரணையுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் 17 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள "நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வீதி"யின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காகவே இந்த விஜயம் அமையப்பெற்றிருப்பதாக நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெப்பை அவர்கள் தெரிவித்தார். 

மேலும் இந்த விஜயத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் MS உதுமாலெப்பை,  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான MT ஹசன் அலி, பைசால் காசிம் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், MLA அமீர், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் MAM தாஹிர் ஆகியோர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :