முஸ்லிம் பிரதேசங்களில் இன்றையதினம் பூரணமாக அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் தொடர்பில் மேல்மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவருமான முஜிபுர்ரஹ்மான் பொலிசாரால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் சிவில் உடையில் அவரின் வீட்டுக்கு சென்ற இரு பொலிசாரே இது தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த முஜிபுர்ரஹ்மான்,
இன்று காலை 8.30 மணியளவில் எனது வீட்டுக்கு சிவில் உடையில் இரு பொலிசார் வந்தனர். அவர்கள் இன்று அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் தொடர்பில் என்னிடம் விசாரணை நடத்தினர்.
முஸ்லிம் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு மேலதிகமாக பாடசாலைகளையும் இன்று மூடுமாறு கோரிக்கை விடுத்தீரா என அவர்கள் இதன்போது என்னிடம் கேட்டனர். அதற்கு நான் இல்லை என பதிலளித்தேன்.
வடக்கு கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. தலைநகரிலும் சில கடைகள் மூடப்பட்டுள்ளன.
எனினும் கொழும்பில் பொலிசார் வர்த்தக நிறுவனங்களுக்கு சென்று கடைகளை மூடினால் நிரந்தரமாக மூட வேண்டி வரும் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல் வாதிகள் சிலரும் ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பொது பல சேனா ஹிஜாப் தொடர்பில் பிரசாரங்களை மேற்கொள்ளும் பட்சத்திலும் அவர்கள் இவ்வாறானதொரு முடிவையே எடுப்பார்கள் என்பதையே புலப்படுத்துகின்றனர்.
எனினும் வடக்கு மற்றும் கிழக்கு முஸ்லிம்கள் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு சிறந்த பாடத்தை கற்பித்துள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் அரசுடன் இருந்தாலும் மக்கள் அரசுடன் இல்லை என்பதை அவர்கள் ஹர்த்தால் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர் என்றார்.VV
0 comments :
Post a Comment