(எம்.ஐ.றியாஸ்)
கல்முனை - அக்கரைப்பற்று மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக சாரணர் இயக்க தந்தை பேடன் பவலின் 156 ஆவது நினைவு தினத்தையொட்டி பல்வேறு கலாசார நிகழ்வுகள் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளரும் கல்முனை - அக்கரைப்பற்று மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவருமான யூ.எல்.எம்.ஹாசீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு இணைப்பாளர் கேணல் நவரெட்ண கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கல்முனை - அக்கரைப்பற்று மாவட்ட சாரண ஆணையாளரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஐ.எல்.ஏ.மஜீட் கௌரவ கல்முனை - அக்கரைப்பற்று சாரணர் ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா மாவட்ட உதவி சாரணர் ஆணையாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டார்.
இவ் வைபவத்திற்கு கல்முனை கல்வி மாவட்டத்தில் 50 தமிழ் முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து 1500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதன் போது கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் ஹாசீமுக்கு சாரணியத்தின் உலக சமாதானத்திற்கான தூதுவர் பட்டியை கௌரவ மாவட்ட ஆணையாளர் முஸ்தபா அணிவித்தார்.
மாகாணக் கல்விப்பணிப்பாளர் நிஸாமின் சேவையினைப் பாராட்டி வலயக்கல்விப் பணிப்பாளர் ஹாசீமினால் நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டதுடன் தன்னை சாரணியத்திற்காக அர்ப்பணித்து செயற்படும் முஸ்தபாவுக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் விசேட பரிசு பொதி வழங்கி கௌரவித்தார். சாரண மாணவர்களின் பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட உதவி சாரணர் ஆணையாளர்கள் பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள் சாரண மாணவ மாணவிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment