இலங்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய யுத்தக் கப்பலை உளவு பார்ப்பதற்கே குறித்த அவுஸ்திரேலிய உளவு விமானம் முயற்சித்ததாக ஈரானின் கடற்படை அதிகாரியான சிவாஷ் ஜராஹ் தெரிவித்துள்ளார்.
இந்த யுத்தக் கப்பலை வீடியோ படமெடுக்க அவுஸ்திரேலிய உளவு விமானம் முயற்சித்ததாக குறிப்பிட்டுள்ள அவர் இதன் போது அவுஸ்திரேலிய கண்காணிப்பு விமானத்திற்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு வேறும் திசைமாறி பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து குறித்த கண்காணிப்பு விமானமானது ஈரானின் நீர்மூழ்கி கப்பல்களை கண்காணிக்கும் கருவிகளை கடலில் போட்டுச் சென்றதாகவும் ஈரானின் அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களின் காரணமாக இந்த கருவிகளை கண்டுபிடிக்க முடிந்ததாவும் ஜராஹ் சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment