இஸ்ரேலை நோக்கி படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள்!



எகிப்திலிருந்து இஸ்ரேலை நோக்கி இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமாக சுமார் 30 மில்லியன் வெட்டுக்கிளிகள் வரை இஸ்ரேலை வந்தடையும் என அஞ்சப்படுகின்றது.இவற்றில் சுமார் 1 மில்லியன் வெட்டுக்கிளிகள் ஏற்கனவே அந்நாட்டினுள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் வெட்டுக்கிளிகள் எகிப்தில் பெருமளவிலான பயிர்களை நாசம் செய்துள்ளன.

இவை இன்னும் சில தினங்களில் முழுதாக இஸ்ரேலை வந்தடையுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதனால் இஸ்ரேலில் பயிர்கள் பெரிதளவில் பாதிக்கப்படுமென அஞ்சப்படுகின்றது.

அவை ஏற்கனவே தெற்கு இஸ்ரேலில் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிகின்றது.

விமானத்தில் இருந்து மருந்துகளை தெளித்து அவற்றைக்கொள்ளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலிய விவசாய அமைச்சும் தன்பங்கிற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

பாலைவன வெட்டுக்கிளிகளே ( desert locusts)இவ்வாறு படையெடுத்துள்ளன. இவை இதற்குமுன்னரும் பல ஏக்கர் பயிர் நிலங்களை நாசப்படுத்திய சம்பவங்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :