நாம் வழங்கியுள்ள காலக்கெடுவுக்குள் ஹலால்இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். இதில் ஹெல உறுமய மூக்கை நுளைக்கக்கூடாது- பொது பல சேனா.


ஹலால் சான்றிதழ் விவகாரத்தில் ஹெல உறுமய மூக்கை நுழைப்பதை நாம் விரும்பவில்லை என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
 
ஹலால் சான்றிதழை அரசாங்கம் தடை செய்ய வேண்டும். இன்றேல் உலமா சபை அதனை வாபஸ் வாங்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். நாம் வழங்கியுள்ள காலக்கெடுவுக்குள் ஹலால் சான்றிதழ் இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் பொது பல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்த விடயத்தில் ஹெல உறுமய தலையிட்டு குட்டையைக் குழப்பக் கூடாது. நாம் கொடுத்துள்ள காலக் கெடுவுக்குள் ஹலால் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவ் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
 
ஹலால் சான்றிதழ் விடயத்தில் பொது பல சேனாவும் ஜாதிக ஹெல உருமயவும் தனித்தனியான பிரசாரங்களையே மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.VV
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :