(எஸ்.எல். மன்சூர்)
எதிர்வரும் 23ஆந்திகதி அம்பாரையை மையப்படுத்தியவாறு அமையவிருக்கும் மாபெரும் தயட்டகிருள கண்காட்சிக்கு அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து மாணவர்களின் ஆக்கங்கள் அடங்கிய உபகரணத் தொகுதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திகான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.முத்தலிப் தெரிவிக்கின்றார்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளிலிருந்து விஞ்ஞான மற்றும் கணிதப்பாடங்களை உள்ளடக்கிய ஆக்கப் பொருள்களை நவீன சிந்தனையுடன் காட்சிப்படுத்தக்கூடியவாறு புத்தாக்கம் நிறைந்ததாக அமையும் வண்ணம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களின் பிரகாரம் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து பல பாடசாலைகளில் இந்நவீன புத்தாக்கம் நிறைந்த உபகரணங்கள் மாணவர்களால் அவர்களது ஆசிரியர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டு அவை போட்டியடிப்படையில் தெரிவு செய்யப்பட்டன.
அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட உபகரணங்களை எதிர்வரும் தயட்டகிருள கண்காட்சிக்கு அனுப்பிவைக்கப்படுவதாகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.முத்தலிப் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment