இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ள கரும்புச் செய்கை.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

அம்பாறை 9 ஆம் கட்டை இழுக்குச்சேனை பகுதியிலுள்ள சுமார் 350 ஏக்கருக்கு மேற்பட்ட கரும்புச் செய்கைக் காணிகளில் சுமார் 250 ஏக்கரில் இம்முறை கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ள இக்கரும்புச் செய்கையின் அரைவாசி விதைக் கரும்புக்கும், மற்றய அரைவாசி சீனிக்காகவும் செய்கை பன்னப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றன. விதைக் கரும்புச் செய்கையின் அறுவடை இன்னும் ஓரிரு மாதங்களின் பின்னர் இடம்பெறவுள்ளதாகவும், சீனிக்காக செய்கை பன்னப்பட்ட கரும்புகள் இன்னும் 6 மாதங்களின் பின்னர் அறுவடை செய்யப்படவுள்ளதாகவும் கரும்புச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இழுக்குச்சேனை 174ஃ31 கன்டம் மற்றும் 9 ஆம் கட்டை 173 கன்டம் ஆகிய கன்டங்களில் கரும்புச் செய்கையை மேற்கொண்டுள்ள கரும்புச் செய்கையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
விவசாயம் செய்பவர்களுக்கு பல வகையான கஷ்டங்களும், நஷ்டங்களும் உண்டாகுவதைப்போல் கரும்புச் செய்கையில் எந்த விதமான நஷ்டங்களும் கஷ்டங்களும் ஏற்படுவதில்லை. மாறாக கரும்புச் செய்கை பன்னப்பட்ட மூன்று மாத காலங்களுக்குள் இக்கரும்புகளை சூழவுள்ள புல் பூண்டுகளை அகற்றி துப்பரவு செய்து விட்டால் போதுமானதாகும்.

விதைக்காக செய்யப்படும் அதாவது ஸீக்கன் என அழைக்கப்படும் கரும்புச் செய்கையானது 6 மாத காலங்களின் பின்னர் அறுவடை செய்யப்படுவதாகவும், சீனிக்காக செய்யப்படும் கரும்புச் செய்கையானது 11 மாதங்களின் பின்னரும் அறுவடை செய்யப்படுகின்றன. இதில் முதல் முறையாக செய்யப்படும் கரும்புச் செய்கையாவும் விதைக்காகவும், பிந்தி 5 வருட காலத்துக்கு செய்கை பன்னப்படும் கரும்புச் செய்கையாவும் சீனிக்காகவும் செய்யப்படுகின்றன.
இவ்விதைப்புக்கள் யாவும் 5 வருடத்துக்கு ஒரு முறைதான் விதைக்கப்படுவதாகவும், இவ்வாறு செய்கை பன்னப்படும் கரும்புச் செய்கையில் ஒன்றுக்கொன்று இலாபம் கிடைப்பதாகவும் வருப்பத்தாஞ்சேனையைச் சேர்ந்த ஏ.பி.அப்துல் றஹ்மான் என்ற கரும்புச் செய்கையாளர் சுட்டிக்காட்டினார்.

விதைக் கரும்பு ஒரு தொண் 3500.00 ரூபாவாகவும், சீனிக்கரும்பு ஒரு தொண் 4000.00 ரூபாவாகவும் விற்பணை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :