இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக ‘ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம்’ இன்று திறந்து வைப்பு- (படங்கள் இணைப்பு.)




இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக ‘ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம்’ இன்று காலை சுப வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
அம்பாந்தோட்டை மத்தளவில் அமைந்துள்ள இவ்விமான நிலைய
திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்த விமானத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் வருகை தந்திருந்தனர், 
இதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸக்குச் சொந்தமான விமானமும் தரையிறங்கியதுடன், எயார் அரேபியா மற்றும் ப்ளேய் துபாய் போன்ற விமானங்களும் தரையிறங்கிய்தும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி இவ்விமான நிலையத்துக்கு அடிக்கல் நடப்பட்டது. இவ் விமான நிலைய அமைப்புப் பணிகள் 2010ஆம் ஆண்டு முதல் சைனா ஹாபர் பொறியியல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலை யத்தையும் விட 3500 மீற்றர் நீளமும் 75 மீற்றர் அகலமும் கூடுதலாக கொண்டதான ஓடுபாதை இங்கு அமைக் கப்பட்டுள்ளது.
45 மீற்றர் உயரமான கட்டுப்பாட்டுக் கோபுரம் இங்கு அமைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்டமாக அமையவுள்ள ஓடு பாதையில் தரையிறங்கும் விமானங்களையும் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கென 2000 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளுக்கும் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அம்பாந்தோட்டை மத்தளயில் பெரும் காடாக இருந்த பூமி இன்று சர்வதேச விமான நிலையமாக காட்சியளிக்கிறது. ஓடுபாதைக்குள் யானைகள் உள்நுழையாத வாறு மின்சார வேலிகள் அமைக்கப்பட வுள்ளன.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :