அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை ஊடகவியலாளர் சந்திப்பொன்று நாளை.


ஹலால் தொடர்பிலான விசேட தீர்மான அறிவிப்புக்களை விடுக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று  நாளை கொழும்பு  சினமன் கிரேன்ட்  ஹோட்டேலில் இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை , வர்த்தக சம்மேளனம் மற்றும் பௌத்த தேரர்கள் ஆகியோரின் இணை ஏற்பாட்டிலேயே இந்த ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்படவுள்ளது.

ஹலால் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இன்னும் அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்பிக்காத நிலையிலேயே ஹலால் தொடர்பில் முக்கிய தீர்மானங்களை அறிவிக்கும் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

 நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இந்த ஊடகவியலாளர் மாநாடு நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.

முன்னதாக  ஹலால் சான்றிதழ் வழங்குவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சகல தரப்பினரின் இனக்கப்பாட்டுடனேயேகுறித்த  தீர்மானம் எட்டப்பட்டதாகவும்  உயர்மட்ட  தகவல்களை ஆதராம் காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.

அதில் சம்பந்தமான தரப்பினருடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ  பேச்சுவார்த்தைகள் நடத்தியதன் பின்னரே இடைநிறுத்தல்  தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மதத்தலைவர்கள், இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகள், முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் ஜம்இயத்துலமா முக்கியஸ்தர்கள் பங்குபற்றியதாக வும்  ஹலால் சான்றிதழ் விநியோகிக்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் சந்தைக்கு விற்பனை செய்வதற்காக ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் நிறைவடையும் வரையிலும் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்  அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன் இதற்கு பின்னர் ஹலால் சான்றிதழ் விநியோகிக்கப்படவேண்டிய தேவை ஏற்பட்டால் எவ்விதமான கட்டணங்களும் அறவிடாமல் விநியோகிப்பதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. VV.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :