இலங்கை அணிக்கும் சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள்



இலங்கை அணிக்கும் சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் பேட்டி இன்று பி.ப. 2.30 மணிக்கு ஹம்பந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் அரங்கில் இடம்பெறவுள்ளது.
 
இதேவேளை இன்றைய போட்டியின் போது சர்வதேச ஒருநாள் ஆட்டங்களுக்கு அறிமுக வீரர்களாக இலங்கை அணியில் சஜித் பத்திரண, அஞ்சலோ பெரேரா, கிதுருவன் விதானகே ஆகியோர் கலமிரங்குகின்றனர். அத்தேடு பங்களாதேஷ் ஸம்சுர் ரஹ்மானை அறிமுக வீரராக களமிரக்குகின்றது.
 
இன்றைய ஒரநாள் போட்டிக்கான அணி விபரம்
 
இலங்கை 
அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ், உப அணித்தலைவர்  டினேஷ் சந்திமல், திலகவர்தன டில்ஷான், சமிந்த ஏரங்க, நுவான் குலசேகர, லஸித் மலிங்க, ஜீவன் மெண்டிஸ், சஜித் பத்திரண, அஞ்சலோ பெரேரா, கௌசல் ஜனித் பெரேரா, திஸார பெரேரா, குமார் சங்ககார, சஜித்ர சேனாநாயக, உபுல் தரங்க, லகிரு திரிமன்னே, கிதுருவன் விதானகே

பங்களாதேஷ்
அணித்தலைவர் முஸ்பிகுர் ரஹீம், அப்துர் ரஸ்ஸாக், அபுல் ஹஸன், அனாமுல் ஹக், ஜஹ்ருல் இஸ்லாம், மஹ்முதுல்லாஹ், முஹம்மத் அஷ்ரபுல், மைமுனுல் ஹக், மெஸர்ரப் ஹொஸைன், நஷிர் ஹெஸைன், ரொபல் ஹொஸைன், ஸம்சுர் ரஹ்மான், செஹாக் காஷி, ஷைஉர் ரஹ்மான்
 
ஏற்கனவே கடந்த சனிக்கிழமை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட்  மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது போட்டியின் போது இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
 
பங்களாதேஷ் அணியின் இலங்கை சுற்றுலாவின் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது. இதேவேளை தொடரின் ஒரேயொரு இருபதுக்கு 20 போட்டி இம்மாதம் 31 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :