மதிய நேரம் அது .
கொழும்பில் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள மிக பிரபலம் வாய்ந்த முன்னணி பாடசாலை
அது .சிங்கள நண்பர் ஒருவன் தண்ணீர் கேட்டமைக்காக தனது ‘ட்ரிங் பாட்டிலில்’ இருந்து தண்ணீர் கொடுக்க தயாரானான் அந்த எட்டு
வயதான ரிசான் . தூரத்தில் கேட்டது இன்னொரு சிங்கள நண்பனின் ஓசை . "ஏ .. "பொண்ட எப்பா" ஏக்க ஹலால் வதுற "(அதை குடிக்காதே அது ஹலால் தண்ணீர் ) இதுதான் இன்றைய
இலங்கையின் நிலை .பொது பலசேனாவின் நச்சுக்கருத்துக்கள் படித்த மக்கள் முதல் பாமர
மக்கள் வரை பீடித்து வருகின்றன .பெரியவர்களை மாத்திரன்றி பிஞ்சுகளை கூட பாதித்துள்ள
இந்த இனவாதம் அடுத்த தலைமுறையை எப்படி நாட்டில் உருவாக்கும் என்பதை கற்பனை
செய்து பாருங்கள் ?
மேற்குறிப்பிட்ட நிகழ்வு உண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவம் .இது
போல பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன . அண்மையில் தெஹிவளை பகுதியில் நிக்காப் அணிந்து
கொண்டு பஸ் வண்டியில் ஏறிய முஸ்லீம் பெண்
ஒருவரை பார்த்து உள்ளே அமர்ந்திருந்த
சிங்கள பெண் ஒருவர் கத்தி
குளறியுள்ளார் . இந்த பெண்ணை பார்த்து என் பிள்ளை பயப்படுகின்றது ஒன்றில் இந்த பெண் பயணம் செய்ய வேண்டும்
இல்லையேல் நான் பயணம் செய்ய வேண்டும் என்று
கத்திய போது முஸ்லீம் பெண் பலவந்தமாக பஸ் வண்டியை விட்டு இறக்கப்பட்டுள்ளார் .
பௌத்த தர்மம்
மதமாக பேணப்படும் நாடு ஒன்றில்
அண்மைக்காலமாக இடம்பெறும் கசப்பான சம்பவங்கள் முஸ்லீம்களை
மனம் கோண வைத்துள்ளது .எங்கு பார்த்தாலும் இனவாதம் ,மதவாதம் என்று கொடி கட்டிப்பறக்கும் போது நாட்டின் அபிவிருத்தி
என்பது எப்படி நடக்கும் ? ஒரு இனத்தை அச்சத்திலும் ,நிம்மதி இல்லாத நிலையில் வைத்து விட்டு எப்படி இலங்கை அபிவிருத்தியை நோக்கி பயணம் செய்யப்போகின்றது ?
அண்மையில் பெண்
வைத்தியர் ஒருவர் கொழும்பில் உள்ள மருத்துவ மனை ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கும்
போது பின்னால் வந்த பெரும்பான்மை இன
இளைஞர் ஒருவர் அவரை பின்னால் இருந்து உதைத்துள்ளான் .ஏன் உதைத்தாய் என்று
கேட்டமைக்கு மிக மோசமான வார்த்தைகளால்
திட்டியுள்ளான் . கல் எளியாவில் உள்ள முஸ்லீம் சப்பாத்து கடை ஒன்றுக்குள் சென்ற
சிங்கள கூட்டம் ஓன்று ஹலால் செருப்பு உள்ளதா என்று கேட்டு வாதித்துள்ளது . திஹாரி பகுதியில் பஸ்
வண்டியில் பயணம் செய்ய முயன்ற ஹிஜாப் அணிந்த பெண்களை பஸ் வண்டியில் இருந்தவர்கள் இது ஹராமான பஸ்
நீங்கள் ஹலாலான பஸ்ஸில் செல்லுங்கள் என்று
கூறி நக்கல் பண்ணியுள்ளது
இதெல்லாம்
நாட்டில் அன்றாடம் நடக்கும் செயல்கள் . இதை தடுக்க இலங்கை அரசோ ஆட்சியில் உள்ள
முஸ்லீம் அரசியல் வாதிகளோ வார்த்தைகால் பேத்துவதை விட ஆக்கபூர்வமாக எதுவும் செய்ததாக தெரியவில்லை . அசாத் சாலி
உட்பட ஒரு சில முஸ்லீம் அரசியல் வாதிகளே இந்த நிலையில் தைரியத்துடன் குரல்
கொடுத்து வருகின்றனர் .
இந்த நிலையில்
இலங்கை ஜமீய்யதுல் உலமா பொறுமையுடன் ,நாட்டின் இன
ஒற்றுமை கருதி எடுத்து வரும் நடவடிக்கைகளை
என்னால் விமர்சிக்க முடியவில்லை . எடுக்கப்பட்ட
தீர்மானங்கள் சரியானவையா தவறானதா என்பதை
காலம்தான் பதில் சொல்ல வேண்டும் . பொறுமையாளர்களுடன் எல்லாம் வல்ல அல்லாஹ் இருப்பதால் நிச்சயமாக
இந்த விடயத்தில் பொறுமை காப்பது மிகவும் அவசியமானது
ஹலால் குறித்து
கத்திய பொதுபல சேனா இப்போது அபாயாவை நோக்கி தனது கவனத்தை திசை திருப்பி
உள்ளது. அவர்களுக்கு எத்தனை விடயங்களில்
விட்டுக்கொடுத்தாலும் அவர்கள்
அமைதிப்படப்போவதில்லை. எத்தனை தியாகங்கள் செய்தாலும் அவர்கள்
திருப்திப்படப்போவதில்லை .
அவர்களுக்கு
பின்னால் இருந்து செயற்ப்பட்டுக்கொண்டிருக்கும்
வெளிநாட்டு சக்திகள் அவர்களின் இலக்குகளை அடையும் வரை அவர்களை
ஆட்டிக்கொண்டே இருப்பார்கள் .நாட்டில் அரசியல் ரீதியாக மக்கள் மத்தியில் பிரபலம்
பெற இனவாதம் நல்லொதொரு கருத்து என்ற
மனநிலையில் பொதுபலசேனா இருப்பதால் அவர்கள்
அதில் இருந்து ஓயப்போவதில்லை. அரசாங்கமும் ஊர் இரண்டாய் பிரிந்தால் கூத்தாடிக்கு
கொண்டாட்டம் என்ற ரீதியில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது .
இறுதிக்கட்ட
யுத்தத்தின் போது நாட்டில்
இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் ,படுகொலைகள் ஆகியவற்ற்றுக்கான விசாரணை
வேண்டுதல்களில் இருந்து சர்வதேசத்தை திசை திருப்ப
இது போன்ற சம்பவங்களை அரசாங்கம்
கண்டும் காணாமல் இருப்பதாக கூட இது இருக்கலாம்
ஒரு போதும்
இல்லாத வகையில் இலங்கை முஸ்லீம்கள் அமைதியாக இருப்பது பாராட்டத்தக்க விடயம்.
பொறுமையுடன் இருக்கும் முஸ்லீம்களை கோழைகள் ,பயந்தாங்கொள்ளிகள் என்ற நிலையில் பொது பல சேனா பார்க்கும்
நிலைக்கு ஆக்கியுள்ளது .
எனினும் வன்முறைகளால்
நாம் இலங்கையில் சாதிக்கப்போவது எதுவும் இல்லை . அவ்வாறான வன்முறை நிலை
ஏற்பட்டால் அதிகம் சேதம்
ஏற்படப்போவதும் நமக்குத்தான் .வாள்களை வைத்துக்கொண்டு பீரங்கிகளுடன் மோதும்
நிலையில் நாம் உள்ளோம் . எனவே நாம்
தொடர்ந்தும் பொறுமை காக்கும் அதே வேளை ,பொது பல சேனா மீதுள்ள நமது அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டியது நமது
கடமையாகி யுள்ளது
இந்த பொதுபலசேண
விதைக்கும் நச்சு விதைகள் நாட்டில் முளை விட்டுக்கொண்டிருக்கின்றது. நாட்டில் உள்ள
முஸ்லீம்கள் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் இருப்பது கூட இதுபோன்ற நச்சு விதைகள் செழித்து வளர
காரணமாக அமைந்து விடலாம்
எனவே இந்த
நிலையில் ஜமீயத்துல் உலமாவை நமது ஏக சமாதான பேரம் பேசும் பிரதிநிதியாக இதில்
தலையிட வைக்காமல் வைக்கும் அதே நேரம்
ஆக்கபூர்வமான ,அமைதியான ,எல்லை மீறாத ஆர்ப்பாட்டங்களை நடத்துவது மிகவும் அவசியமானது ஆகும் . ஒவ்வொரு
பள்ளிவாசல்களும் மிக அவதானமான முறையில்
இதனை திட்டமிட வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பது போல ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபடும் முஸ்லீம்கள் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் .இன குரோத வாசகங்களை
ஏந்துவது ,ஏனைய மதத்தவர்களை
நிந்திப்பது, போன்ற வாசகங்கள்
இடம்பெறுவது,பௌத்த பிக்குகளை
அவமதிப்பது ,அவர்களை அவமதிக்கும் வாசகங்களை ஏந்துவது ,ஆக்ரோசத்துடன் நடந்து கொள்வது ஆகியனகண்டிப்பாக தவிர்க்கப்பட
வேண்டும் . முஸ்லீம்கள் ஆத்திரத்தை ஓரம்
கட்டி விட்டுவிவேகமான முறையில்
ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் .உள்ளூர் பொலிசாரின் அனுமதிகளுடன் வெள்ளிக்கிழமை ஜும் ஆ முடிவில் ஒரே நாளில் அனைத்து முஸ்லீம்களும் தத்தமது ஊர்களில்
உள்ள பொது இடங்களில் திரண்டு இனவாதத்துக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும்
இனவாத பொது பல
சேனாவுக்கு பொது இடத்தில் கூட்டம் கூட்ட முடியுமானால் அமைதியாக நாம் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது
மௌனம்
சம்மதத்தின் அறிகுறி. பொதுபல அமைப்பின் குற்றச்சாட்டுக்களை நாம் எதிர்க்கா
விட்டால் அந்த குற்றச்சாட்டுக்களை ஏற்பதாகத்தானே அர்த்தம்.
அதனால் எல்லா
முஸ்லீம்களும் எல்லா ஊர்களும் இதற்கென ஒரே
நாள் அமைதியான ஆர்ப்பாட்டத்துக்கு தம்மை தயார்
படுத்த வேண்டும் .
எல்லாம் வல்ல
அல்லாஹ் நம்மையும் , நம் உறவுகளையும் ,சந்ததிகளையும் நம் சொத்துக்களையும் ஊர்களையும்
பாதுகாப்பானாக
அய்யாஷ் (muslimworld)
0 comments :
Post a Comment