சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போது பழ.நெடுமாறன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற பழ.நெடுமாறன் கைது


Bookmark and Share
சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் இன்று (04) முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். 

நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியிலிருந்து காலை 11 மணிக்கு ஊர்வலமாகச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஐ.நா.வில் கொண்டு வரப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயம் செய்துகொள்ளும் வகையில் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்பட 5 கோரிக்கைகள் போராட்டத்தின்போது வலியுறுத்தினர். 

இந்த முற்றுகை போராட்டத்தின் போது பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :